Somanatheeswarar Temple- Melpadi

Sri Somanatheeswarar Temple – Melpadi

ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில்- மேல்பாடி

இந்த ஊரானது வரலாற்று புகழ் மிக்க ஊராகும் சென்னையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சோழர்கள் காலத்தில் ராஜேஸ்ரேயபுரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கார் ஹேட்ட பிளேட் மூலம் இங்கு கிபி 959 ராஷ்டிரகூட ராஜா கிருஷ்ணன்111 முகாம் விட்டதாக கூறப்படுகிறது. இவ்வூர் ஆனது இரு நாட்டின் எல்லையாக உள்ளதால் சோழர்கள் இந்த ஊரை எல்லை பாதுகாக்க அரணாக வைத்து இருந்தாக கூறப்படுகிறது.

இங்குள்ள கருவறையில் தெற்குச் சுவரில் கல்வெட்டில் ராஜராஜ சோழன்1 பற்றி குறிப்பு உள்ளது. அதில் குடமலி பகுதி பாண்டியர்களை எதிர்த்து வெற்றி கண்டதை குறிப்பிட்டுள்ளார்கள். மற்றும் இறையவன் பல்லவயன் என்ற சோழர்களுடைய அலுவலர் பெயரும் உள்ளது. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தொல்லியல் கட்டுப்பாட்டில் இந்த கோயில் உள்ளது . நுழைவாயிலில் கோபுரம் இல்லை அதைக் கடந்து உள்ள மூன்று அடுக்குடன் கூடிய கோபுரம் காணப்படுகிறது. பின்பு உள்ளே சென்றாள் சோமநாதீஸ்வரர் சன்னதி வருகிறது. இறைவன் பெரிய லிங்க திருமேனி. விமானம் முழுவதும் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இறைவி தபஸ்குருத தேவி தனி சன்னதியில் உள்ளார். இந்த சன்னதி மிக அழகான விமானம் மற்றும் முக்த மண்டபம் கொண்டுள்ளது. இவைகள் பின்னாளில் விஜயநகர அரசர்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மிகவும் அழகான மற்றும் வரலாற்றோடு தொடர்புடைய இந்த கோயிலை நம் குழந்தைகளோடு சென்று அவர்களுக்கு நமது வரலாற்று செய்திகளை விளக்கிக் கூறலாம்.

இக் கோவிலுக்கு எதிர்புறம் ராஜராஜசோழனின் தாத்தாவான அரிஞ்சய சோழன் பள்ளிப்படை அதாவது சமாதி அமைந்துள்ளது இந்த பள்ளிப்படை பற்றி எனது அடுத்த நீங்கள் காணலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம் :


காலை 7 .00 – 12 .00 , மாலை 5 .00 -7 .00

செல்லும் வழி:

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் ராணிப்பேட்டை இருந்து காட்பாடி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 140 km தொலைவிலும் , காட்பாடியில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் , வேலூரில் இருந்து சுமார் 35 km தொலைவிலும் அமைந்துள்ளது .

அருகில் உள்ள கோயில்கள் :

1. அரிஞ்சய  சோழன் பள்ளிப்படை – மேல்பாடி

2.வள்ளி தாயார் பிறந்த இடமும் ,முருக பெருமான் வள்ளியை காதலித்த இடமும் ஆன வள்ளிமலை

3 . வில்வநாதீஸ்வரர் கோயில் – திருவலம்

Location Map :

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply