Sri Someswara swamy temple- Kotipali

ஸ்ரீ சோமேஸ்வரா கோயில் – கோட்டிப்பள்ளி

Sri Someswara Swamy Temple- Kotipalli

இறைவன் : கோட்டீஸ்வரர் ,சோமேஸ்வரர்

தாயார் : உமா பார்வதி தேவி

பெருமாள் : ஜனார்த்தன பெருமாள்

தாயார் : ஸ்ரீ தேவி ,பூதேவி

ஊர் : கோட்டிப்பள்ளி

மாவட்டம் : கிழக்கு கோதாவரி

மாநிலம் : ஆந்திர பிரதேசம்

  • கௌதமி நதிக்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான புராணத்துடன் தொடர்புடைய சிவ ஆலயங்களில் இக்கோயிலும் ஒன்றாகும் ,இக்கோயிலை அடைய நாங்கள் முக்தீஸ்வரம் சென்று அங்கிருந்து மிக அருகில் உள்ள கவுதமி நதியை ferry மூலம் கடந்து இக்கோயிலை அடைந்தோம் ,மிகவும் இனிமையான பயணமாக அமைந்தது .
  • இக்கோயிலில் இரண்டு சிவ லிங்கங்கள் உள்ளன ,ஒரு லிங்கத்தின் பெயர் கோட்டீஸ்வரர் மற்றொருவர் சோமேஸ்வரர் ஆவார் . கோட்டீஸ்வரர் லிங்கத்தை இந்திரனும் ,சோமேஸ்வரர் லிங்கத்தை சந்திரன் பிரதிஷ்டை செய்துள்ளார்கள் .
  • கோட்டீஸ்வரர் லிங்கத்தை யோக லிங்கம் என்றும் ,சோமேஸ்வரா லிங்கத்தை போக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்.
  • இங்குள்ள பூதேவி .ஸ்ரீதேவி சமேத ஜனார்த்தன ஸ்வாமி பெருமாளை காசியப மகரிஷி பிரதிஷ்டை செய்துள்ளார்.
  • கோட்டீஸ்வரர் லிங்கம் : இந்திரன் கௌதம மகரிஷி போல் உருமாறி மகரிஷி மனைவி அகல்யாவை தகாதமுறையில் ஆட்கொண்டான் ,இதனால் கோபமுற்ற மகரிஷி இந்திரனுக்கு தொழுநோய் ஆட்கொள்ளுமாறு சாபம் இட்டார் ,அகல்யாவிற்கு பாறையாக மாறுமாறு சாபம் இட்டார் , இருவரும் தன சாபத்தில் இருந்து விடுபட மஹரிஷியிடம் வேண்டி கேட்டுக்கொண்டனர் . மகரிஷி அகல்யாவிடம் ஸ்ரீராமர் தன் பாதத்தால் உன்னை தொடும்போது நீ சாபத்திலிருந்து விடுபடுவாய் என்றும் ,இந்திரனிடம் நீ கவுதமி நதியில் நீராடி சிவனை பிரதிஷ்டை செய்து அவரை வணங்கிவந்தால் சாபத்தில் இருந்து விடுபடலாம் என்றும் கூறினார் ,அதன்படி இந்திரன் இங்கு சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்ததால் தன் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான் .
  • சோமேஸ்வர லிங்கம் : சந்திரன் குரு பகவானின் மனைவி தாரா வை தவறான முறையில் தீண்டியதால் குருவின் கோபத்திற்கு ஆளானான் ,அவர் சாபத்தால் சந்திரன் தன ஒளியை இழந்தான் ,தன் சாப விமோசனத்திற்காக விஷ்ணு பகவானிடம் வேண்டினான் அவர் சந்திரனிடம் கௌதமி நதிக்கரையில் நீராடி சிவனை பிரதிஷ்டை செய்து வந்தால் சாப விமோசனம் பெறலாம் என்று கூறினார் . அவ்வாறே சந்திரன் இங்கு சிவனை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து தன் சாபத்தில் இருந்து விடுபட்டான். ஐந்து அடி உயரம் உடைய crystal போல் உள்ள லிங்கம் ஆகும் , இவ் லிங்கமானது சந்திரனின் கால மாறுதலில் தன் ஒளியை மாற்றுவதுபோல் இவ் லிங்கமும் மூன்று நிலைகளில் தன் ஒளியை மாற்றுகிறது .
  • கோட்டீஸ்வர லிங்கம் எப்போதும் நீரால் சூழப்பட்டுளார் ,அந்த கோட்டி தீர்தத்தையே அர்ச்சகர் பக்தர்களுக்கு தீர்த்தமாக கொடுக்கிறார்கள் ,இந்த தீரத்தை அருந்தினால் நம் பாவங்கள் மற்றும் சாபங்களில் இருந்து விடுபடுவார்கள் என்ற ஐதீகம் உள்ளது

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-someswarar-swamy-temple-kotipali.html

Sri Someswara Swamy Temple- Kotipalli
  • This temple also known as Uma parvathi sahitha Someswara swamy temple is a famous temple dedicated to lord shiva located on River Goudami at Kotipalli. This temple has two shivalingas namely Koteswarar swamy linga installed by Lord Indra and Someswarar swamy linga installed byLord Chandran. First one is Yoga linga,someswarar is Bhoga linga.

Opening Time:

Morning  6.00 up to Evening 9.00

By Road: Kotipalli bus terminal-400 metr

By train: Kotipali Railway station -2 km

By Air: Rajamundry – 74 km

Content Source : Thanks to pilgrimaide

Location:

Leave a Reply