ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி )-திருவெஃகா
இறைவன் : யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த
பெருமாள் .
அம்பாள் : கோமளவல்லி தாயார்
தல தீர்த்தம் : பொய்கை தீர்த்தம்
ஊர் : திருவெஃகா , காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
- 108 திவ்ய தேசங்களில் 52 வது திவ்ய தலமாகும் ,தொண்டை நாட்டு திவ்ய தேச தலமாகும் .
- ஆழ்வார்களின் முதன் மூவரில் ஒருவரான பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம். இக்கோயிலில் உள்ள பொய்கை திருக்குளத்தில் தாமரை மலரில் அவதரித்தார் .
- சங்ககால நூலான பெரும்பாணாற்றுப்படையில் இக்கோயிலை பற்றி குறிப்பு உள்ளது.
- ப்ரம்மா நடத்திய யாகத்தை அழிக்க அசுரர்கள் சரஸ்வதியை நாட சரஸ்வதியும் வேகவதியாக ஓடிவந்து யாகத்தை அழிக்க முற்படும்போது பிரம்மாவும் ,தேவர்களும் மகா விஷுனுவிடம் சரணடைய வேகவதியின் வேகத்தை தடுக்க பெருமாள் அணையென்ன குறுக்கே சயனித்தார் ,அவரை தாண்டி செல்லமுடியாமல் சரஸ்வதி விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தார் .அப்போது அவள் கர்வம் நீங்கியது .
- கணிகண்ணன் என்னும் சீடனுக்காக ஊரைவிட்டே புறப்பட்ட திருமிசை ஆழ்வார் தன்னுடன் பெருமாளையும் அழைக்க பெருமாள் பாம்பனை சுருட்டிக்கொண்டு புறப்பட்ட பின்பு பல்லவ அரசன் தன் தவறை அறிந்து திரும்பிட கேட்டுக்கொண்டபோது அவர் மீண்டும் பெருமாளை இருக்க வேண்டினார் .பெருமாளும் அவ்வாறே செய்தார். ஆதலால் அவர் எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத வலது புறத்தில் தலை வைத்து சயனித்தார் .தமிழ் புலவன் சொல் கேட்டு பெருமாள் நடந்ததால் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ‘ என்ற திருநாமம் பெற்றார் .
- பொய்கை ஆழ்வார் ,திருமிசையாழ்வார் ,பேயாழ்வார் ,திருமங்கை ஆழ்வார் அகியோர்களால் மங்களாசனம் செய்யப்பட்டது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .30 -10 , மாலை 5 -8 .30 மணி வரை
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-sonna-vannam-saitha-yodhathkari.html
அமைவிடம் :
காஞ்சிபுரம் இருந்து சின்ன காஞ்சிபுரம் போகும் வழியில் தேரடி தாண்டியவுடன் இடது புறத்தில் சென்றால் இத்தலம் உள்ளது . அருகில் அஷ்டபுஜ பெருமாள் தலம் உள்ளது .
Location: