ஸ்ரீ தல சயனப் பெருமாள் கோயில் – திருக்கடல் மல்லை ( மாமல்லபுரம் )
மூலவர் – தலசயன பெருமாள்
தாயார் – நிலமங்கை தாயார்
உற்சவர் – உலகுய்ய நின்ற பெருமாள்
கோலம் – சயனம்
தீர்த்தம் – புண்டரீக புட்கரணி , கருட நதி
மங்களாசனம் – பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார்
பெருமாளை மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது .63 வது திவ்யதேசம் . தொண்டைநாட்டு திவ்யதேசம் .
14–ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலை கட்டி முடித்துள்ளான்.
தல வரலாறு:
புண்டரீக முனிவர் பாற்கடல் பரந்தாமனின் மீது அளவற்ற பக்தி பெருக்கால் குளத்தில் உள்ள தாமரை மலர்களை கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணின் திருவடிகளுக்கு சமர்ப்பிக்க நினைத்தார் .பறித்த பூக்களை கூடையில் இட்டு கிழக்கு நோக்கி கொண்டு செல்லும் போது ,குறுக்கே கடல் இருந்தது ,பக்தி பெருக்கால் தன் இரண்டுகைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைத்தார் . அண்ணம் அகாரம் இன்றி இதையே செய்துகொண்டிருந்தார் . இதை கண்டு ஆனந்தம் ஆனந்தம் கொண்ட இறைவன் முதியவர் வேடம் இட்டு காரணம் கேட்டார் . அதற்கு புண்டரீக முனிவர் பாற்கடல் செல்ல பாதை ஏற்படுத்துவதாக கூறினார் . உடனே முதியவராக வந்த இறைவன் தனக்கு உணவு தயார் செய்து கொடுத்தால் தானும் உம்மோடு சேர்ந்து இறைப்பதாக கூறினார் . உடனே முனிவர் மகிழ்ந்து விரைவாக இரண்டு பேரும் இறைக்கலாம் என்று எண்ணி உணவு தயார் செய்ய சென்றார் ,உணவு தயார் செய்து திரும்ப வந்து பார்க்கையில் முதியவர் முகுந்தனாக சயனித்திருந்தார் . அதிர்ந்து போன முனிவர் ஆதிசேஷன் மீது கிடப்பவர் வெறும் தரையில் கிடக்கிறாரே என்று மனம் வருந்தி தான் பறித்து வைத்த தாமரை மலர்களை சமர்ப்பித்து திருவடி அருகிலேயே நிரந்தரமாக அமரும் வரத்தை பெற்றார் . இன்றளவும் இத்திருத்தலத்தில் திருவடி அருகே தாமரை மலரையும் ,புண்டரீக முனிவர் அமர்ந்துள்ளதையும் காணலாம் . தரை தலத்தில் சயனித்திருப்பதால் “தல சயன பெருமாள் “என்று அழைக்கப்படுகிறார் .
சாபம் பெற்ற பல்லவ மன்னன் :
மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் 7-வது அரசனான மல்லேஸ்வரன் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில், தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.ஒரு நாள் திடீரென மல்லேஸ்வரன் அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டான். இதனால் பொதுமக்கள் பசி, பட்டினியால் வாடினர்.இதனால் கோபமடைந்த வைணவ அடியார்கள், ‘மக்களின் பசியை தீர்க்க முடியாத நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்‘ என்று கூறி, ‘தண்ணீரில் மிதக்கும் முதலையாக இருப்பாய்’ என்று சாபம் கொடுத்து விடுகிறார்கள் .அங்குள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் முதலை உருவில் மல்லேஸ்வரன் தண்ணீரில் வாழ்ந்து வந்தான். அப்போது அந்தக் குளத்தில் 1000 தாமரை இதழ்களை பறித்து பெருமாளுக்கு படைக்க புண்டரீக மகரிஷி அங்கு சென்றார்.குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மல்லேஸ்வரன் புண்டரீக முனிவரிடம், தன் தவறுக்கு வருந்தி, ‘என்னுடைய சாபம் நீங்கப்பெற நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று மன்றாடி சாப விமோசனம் கேட்டான்.அதற்கு முனிவர், நீ மக்களை பசி, பட்டினியால் வதைத்தாய். உன் சாபம் நீங்கப்பெற வேண்டும் என்றால், 1000 தாமரை இதழ்களை பறித்துக்கொடு’ என்று கேட்க, அவனும் பறித்து கொடுத்தான். பின்னர் கடலில் அருள்பாலித்து கொண்டிருந்த ஸ்தலசயன பெருமாளின் பாதங்களில் 1000 தாமரை இதழ்களை முனிவர் சாத்தினார்.அப்போது அசரீரியாக ஒலித்த பெருமாள், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். அதற்கு புண்டரீக மகரிஷி, ‘பெருமாளே! நான் முற்றும் துறந்த முனிவன். எனக்கென்று எந்த ஆசையும் கிடையாது. இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி நல்ல சுகபோகத்துடன் வாழ வேண்டும் என்றார்.மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார். பின்னர் அரசன் மல்லேஸ்வரனும் தனது சாபம் நீங்கப்பெற்று மீண்டும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கினான். இதன் வரலாறு பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ரகாண்டம் என்ற பகுதியில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.இவ்வாறு வரலாற்று புகழ் பெற்ற, புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில், மாசி மகத்தன்று தலசயன பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.
இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில் மஹாளய அம்மாவாசை மற்றும் அம்மாவாசை அன்று நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால் கயா ,காசியில் கொடுத்ததுக்கு ஈடாகும் .
மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிவன் ,திருமால் தலத்தையே திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்ததாக தெரிகிறது .பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் திரு அவதாரம் செய்த திருத்தலம் .தாயார் தாமரை இன்றி நிலத்திலேயே அமர்ந்துள்ளார் .
பரிகார ஸ்தலம் :
பெருமாள் நிலத்தில் சயனகோலத்தில் வீற்றிருக்கும் ஒரே திவ்யதேசம் இவ் திவ்யதேசமாகும் .இவ் தலத்தில் வந்து நிலத்தில் சயனித்திற்கும் பெருமாளையும் ,தாயாரையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நிலம் ,வீடு சம்பந்தமான பிரச்சனைகள் தேர்ந்துபோகும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது . மற்றும் சாபம் போக்கும் தலமாகவும் இவ் தலம் விளங்குகிறது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-sthala-sayana-perumal-temple.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00மணி வரை
செல்லும் வழி:
சென்னையில் இருந்து சுமார் 60 km தொலைவில் உள்ளது. மாமல்லபுரம் ஒரு மிகசிறந்த சுற்றுலா தலமாகும் . சென்னையில் இருந்து ECR வழியாக பாண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும் .
English :This is one of 108 Divyadesams. This is the Avathara Sthalam of Bhoodathalwar.The Perumal found in this sthalam is Sri Sthala Sayana Perumal. He is found in Kidantha kolam in bhujanga sayanam (sleeping) and facing his thirumugham towards East direction along the sea.The Thaayar of this sthalam is Sri Nila Mangai Thayaar. She is found in a seperate sannadhi.
Location & photos