ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோயில் – குன்றத்தூர் (சென்னை )
இறைவன் : சுப்பிரமணியன்
தல விருச்சகம் – வில்வம்
தீர்த்தம் : சரவணப்பொய்கை
பழமை : 1000 வருடங்கள்
ஊர் – குன்றத்தூர் ,சென்னை
மாவட்டம் : காஞ்சிபுரம்
- திருப்போரூரில் தாருகாசுரனை அவதாரம் செய்து சாந்தமாகி திருத்தணி செல்லும் வழியில் சிவபெருமானை வழிபட நினைத்து இக் குன்றத்தூரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார் . அவர் வழிபட்ட இறைவன் கந்தழீஸ்வரர் என்ற பெயரில் மலை அடிவாரத்தில் உள்ளார் .
- கருவரையில் இருந்து நேராக பார்த்தால் முருக பெருமான் மட்டுமே தெரிவார் ,வலது புறத்திலிருந்து பார்த்தால் தெய்வானை தேவியையும் இடது புறத்தில் இருந்து பார்த்தால் வள்ளி தேவியையும் காணமுடியும் இந்த அமைப்பு உள்ள கருவறை வெகு அபூர்வமாகும் .
- கருவறை ஷண்முகரின் ஷடாட்சர மந்திரத்தை உணர்த்துவது போல் ஷட்கோண வடிவத்தில் அமைந்திருப்பது வெகு சிறப்பாகும் .
- திருப்பரங்குன்றத்தில் தெய்வானை உடன் வடக்கு நோக்கி காட்சி தரும் முருக பெருமான் இங்கு வள்ளி , தெய்வானை ஆகியருடன் சேர்ந்து வடக்கு நோக்கி காட்சி தருகிறார் .
- பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் அவதரித்த தலம்.இவர் தினமும் இவ் முருகரை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் .மலை அடிவாரத்தில் இவருக்கு தனி கோயில் உள்ளது .சேக்கிழார் குரு பூஜையின் போது முருகப்பெருமான் மலையிலிருந்து சேக்கிழார் சன்னதிக்கு எழுந்தருளி ,அவருக்கு தரிசனம் கொடுப்பது மரபாக பின்பற்றப்படுகிறது .
- குழைந்தை வரம் ,திருமண தடை ,துலாபாரம் ,குழந்தையை முருகனுக்கு தத்து கொடுத்து வாங்குதல் ஆகிய வேண்டுதலுக்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது .
- இவருக்கு செய்யும் விபூதி அபிஷேக விபூதியே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது .
- இரண்டாம் குலதுங்க சோழனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது .
அமைவிடம் மற்றும் செல்லும் வழி
பல்லவரத்திலிருந்து 8 km தொலைவிலும் ,போரூரிலிருந்து 12 km தொலைவிலும் ,வண்டலூர் வட்ட சாலை அருகிலும் உள்ளது .
அருகில் உள்ள கோயில்கள்
1 . நாகேஸ்வர கோயில் (ராகு தலம் )-குன்றத்தூர்
2 .கந்தழீஸ்வரர் கோயில் -குன்றத்தூர்
3 . திருஊரக பெருமாள் -குன்றத்தூர்