Sri Sundara Varatharaja Perumal Temple- Virugambakkam (Chennai)

ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் – விருகம்பாக்கம்

Sundara varatharaja Perumal- Virugambakkam

மூலவர் : சுந்தர வரதராஜ பெருமாள்

அம்பாள் : பெருந்தேவி தாயார்

பழமை : 1000 வருடங்கள்

ஊர் : விருகம்பாக்கம் , சென்னை

சென்னையில் அதிகம் அறியப்படாத பழைய கோயில்களில் இக்கோயிலும் ஒன்று . 1000 வருடங்கள் மேற்பட்ட பழமையான கோயிலாகவும் , கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது .

  • சுந்தர வரதராஜ பெருமாள் நின்ற நிலையில் கைகளில் சங்கு , சக்ரம் வைத்துக்கொண்டும் மற்ற இரு கைகளால் அபய ஹஸ்த மற்றும் வரத ஹஸ்த உடன் கட்சி அளிக்கிறார் .
  • கோயிலின் செல்லும் போது ஹனுமான் சன்னதி வரும் அதை கடந்து சென்றால் பெருமாளை தரிசனம் செய்யலாம் . ஸ்வாமியின் நேர் எதிரில் இருபுறங்களிலும் பெருந்தேவி தயார் மாற்று, ஆண்டாள் அம்மையாருக்கு தனி சன்னதிகள் உள்ளன .
  • இக்கோயில் 12 நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது என்றும் ஒரு சிலர் இக்கோயில் தொண்டை நாட்டை சேர்ந்த புலியூர் கோட்டத்தை சார்ந்ததது என்றும் கூறுகிறார்கள் .
  • இக்கோயிலில் தினசரி பூஜைகள் மற்றும் விசேஷ நாட்களுக்கான செலவுகளை பக்த்தர்களிடம் இருந்தே பெற்று சிறப்பாக செய்கின்றார்கள் .

அமைவிடம் :

விருகம்பாக்கம் மார்க்கெட் சாலையின் வழியாக வந்தால் காளியம்மன் கோயிலை தாண்டினால் இக்கோயில் வரும் . ஆற்காட் சாலையிலிருந்து கோயம்பேடு செல்லும் சாலையில் உள்ளது .

Location:

1 Comment

Leave a Reply