ஸ்ரீ சுயம்புநாதர் சுவாமி கோவில் – நரசிங்கப்பேட்டை
இறைவன் : சுயம்புநாதர்
இறைவி : லோகநாயகி
ஊர்: நரசிங்கப்பேட்டை
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
இரண்யகசிபு வதத்தினால் ஏற்பட்ட தோஷம் நீங்க நரசிம்மர் பூஜித்த சிவலிங்கம் ஆவர் இந்த சுயம்பு நாதர் சுவாமி.
ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட பழமையான கோயிலாகும். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக பெயருக்கு ஏற்றர் போல் அமைந்துள்ளார். பெரியலிங்கமேனியாக காட்சி தருகிறார்.
கோவில் சிறிய அழகிய கிராமத்திற்கு நடுவே அமைந்துள்ளது கோவில் வெளிப்பிரகாரம் விசாலமான அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலாகவும் இப்பொழுது கோயில் பராமரிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது.
நரசிம்மர் சிவனை பூஜைசெயும் புடைப்பு சிற்பம் கோவிலின் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இறைவன் நரசிம்மர் இரண்யகசிபு வதத்தினால் ஏற்பட்ட தோஷம் நீங்க இத்தல இறைவனை பூஜித்து தோஷத்திலிருந்து விடுபட்டார்.
இக்கோவிலுக்கு செல்லும் வழியிலேயே ஸ்ரீ யோகநரசிம்மர் கோவில் அமைந்துள்ளது
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை: 7.௦௦ – 9.௦௦ மாலை: 5.30 – 7.௦௦
செல்லும்வழி
மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் நரசிங்கப்பேட்டை பேரூந்துநிறுத்ததில் இறங்கி இடதுபுறம் நடந்து சென்றால் முதலில் நரசிம்மர் கோவிலையும் பிறகு ரயில்வே கிராஸ்ஸிங்கை கடந்து சென்றால் இக்கோவிலை அடையலாம். பேருந்து வசதிகள் கிடையாது. ஆட்டோ கிடைக்கும்.
Location: