சுவர்ண காளீஸ்வரர் கோயில் – காளையார்கோயில்
இறைவன் -சுவர்ண காளீஸ்வரர் , சோமேசர் ,சுந்தரேசர்
இறைவி : சுவர்ணவல்லி,சௌந்தரவல்லி ,மீனாட்சி
தல விருச்சம் : கொக்கு மந்தாரை
தல தீர்த்தம் : கஜபூஷகர்ணி (யானை மடு) ,சிவகங்கை காளிதீர்த்தம்
புராண பெயர் : திருகானப்பேர்
ஊர் : காளையார்கோயில்
மாவட்டம் : சிவகங்கை ,தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர் ,சுந்தரர் ,அருணகிரிநாதர்
தேவார பாடல் பெற்ற பாண்டியநாடு தளங்களில் இது 10 வது தலமாகும்,தேவார சிவத்தலங்களில் இது 200 வது தலமாகும் .
இக்கோயில் சுதந்திர போராட்டத்திற்கு தொடர்புடைய கோயிலாகும் .ஏனனில் சிவங்கை மன்னர்களின் கோட்டையாக இக்கோயில் செயல்பட்டு வந்துள்ளது .சுதந்திர போராட்ட வீரர்களாகிய ‘முத்து வடுக நாத்த தேவர் ‘ மற்றும் மறுத்து சகோதர்களின் கொடையாக திகழ்ந்தது .1722 ஆம் வருடம் ஜூன் 25 அன்று ஆங்கிலேய படைகள் கர்னல் ஜோசப் ஸ்மித் மற்றும் கேப்டன் போஜுர் தலைமையில் காளையார் கோயிலை நோக்கி படையெடுத்தனர் . அப்போது ஆண்ட சிவகங்கையின் இரண்டாவது ராஜா ,முத்து வடுக நாதர் தேவர் (1750 -1772 ) மற்றும் மருதுசகோதர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்தனர் .இதில் ராஜா முத்து வடுகநாதர் மற்றும் பல வீரர்கள் உயிரை விட்டனர் . இக்கோயிலில் இருந்து ஆங்கிலேயர்கள் பல மதிப்புள்ள ஆபரணங்களை எடுத்து சென்று விட்டார்கள் .
தேவகோட்டை ஜமீன்தாரால் கோயில் திருப்பணி செய்யப்பட்டு அவர்களுடைய கட்டளையில் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன . இக்கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்த்தால் மதுரை கோபுரம் தெரியுமாம் .இதனாலேயே “மதுரை கோபுரம் தெரிய கட்டிய மருதுபாண்டி வாராண்டி ” என்ற கும்மிப்பாட்டு இங்கு வழக்கில் உள்ளது .மருதுபாண்டி இக்கோபுரத்தை கட்டியது மட்டும் இல்லாமால் இவ் கோபுரத்தை தன் உயிரை கொடுத்து காத்தனர் .மருது பாண்டியரை கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர்கள் அவர்கள் சரணடையாவிட்டால் இக் கோயில் கோபுரத்தை தகர்த்துவிடுவதாக கூறினர். இதனால் மருதுபாண்டியர் கோபுரத்தை காக்க விரும்பி உயிரை பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்தனர் .அவர்களை ஆங்கிலேயர்கள் தூக்கு தண்டனை விதித்து தூக்கிலிட்டனர் . கோயிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி உள்ளது
பொதுவாக ஒரு கோயிலில் மூலவர் ஒருவரும் அம்பாள் ஒருவரும் இருப்பார்கள் .ஆனால் இக்கோயிலில் மூன்று சிவன் மற்றும் மூன்று அம்பாளுக்கு தனி சன்னதிகள் உண்டு . சோமேசர் – சௌந்தரநாயகி ,சொர்ண காளீஸ்வரர் -சொர்ணவல்லி ,சுந்தரேஸ்வரர் – மீனாட்சி என இவர்களது பெயர்களாகும் .
சுண்டாசுரனை கொன்ற காளி,சொர்ண காளீஸ்வரர் வழிபட்டு ,தன் பாவம் நீங்கி , சொர்ணவல்லி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள் .
தல வரலாறு : இறைவன் காலை வடிவம் கொண்டு சுந்தரருக்கு தன் பாத சுவடுகள் மூலம் தன்னை தரிசிக்க வழிகாட்டினார் .சுந்தரர் அவ்வழியே சென்று இறைவனை தரிசித்தார் . காலை வழிகாட்டிய தளம் என்பதால் இவ்வூர் ‘காளையார் கோயில் ‘ என ஆயிற்று .
நந்தியிடம் சாபம் பெற்ற ஐராவதம் இங்கு வந்து யானைமடு தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்க பெற்றதாக வரலாறு கூறுகிறது .அதுபோல் ராமபிரான் ராவணனை அளித்து பிரமஹத்தி தோஷம் நீங்க இத்தல தீர்த்தத்தில் நீராடியதாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது .
இக்கோயில் இரண்டு கோபுரங்களை கொண்டது .பெரிய கோபுரம் சுமார் 157 ஆதி உயரம் கொண்ட 9 நிலை ராஜா கோபுரம் இதை மருதுசகோதரர்களால் கட்டப்பட்டது .இரண்டாவது கோபுரம் 5 நிலை கொண்டது .இதை முதலாம் சுந்தரபாண்டியார் கட்டினார்.
மூன்று சன்னதிகளும் தனி தனியாக உள்ளது . இறைவன் சன்னதிகள் மூன்றும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது . சொர்ணவல்லி சன்னதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . மற்ற இரண்டு அம்பாள் சன்னதியும் தெற்கு நோக்கி அமைந்துள்ளது . சொர்ணகாளீஸ்வரர் சுவாமியே தேவார பாடல் பெற்ற மூர்த்தியாவார் .
திறந்திருக்கும் நேரம் :
காலை 5 .30 – 12 .30 வரை , மாலை 4 .00 -8 .00 வரை
செல்லும் வலி :
இக்கோயில் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 20 km தொலைவில் உள்ளது . மதுரை ,தேவகோட்டை ,காரைக்குடி ஆகிய ஊர்களில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .
Location:
Om Namasivaya