Sri Swarnakadeswarar Temple – Thiruneivanai

ஸ்ரீ சொர்ணகடேஸ்வரர் கோயில் – நெய்வானை 

Sri Swarnakadeswarar Temple - Thiruneivanai

இறைவன் :சொர்ணகடேஸ்வரர், நெல்வெண்ணெய்நாதர் 

இறைவி : நீலமலர்க்கண்ணி, பிரஹந்நாயகி 

தல விருட்சம் : புன்னை மரம் 

தல தீர்த்தம் : கிணற்று தீர்த்தம்

ஊர் : நெய்வானை 

மாவட்டம் :  கள்ளக்குறிச்சி , தமிழ்நாடு 

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

  நல்வெணெய் விழுதுபெய்து ஆடுதிர் நாள்தொறும்

    நெல்வெணைய் மேவிய நீரே

    நெல்வெணெய் மேவிய நீர்மை நாள்தொறும்

    சொல்வணம் இடுவது சொல்லே

திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற  274 சிவத்தலங்களில் இத்தலம் 221 வது  தலமாகும் , நடுநாட்டு தேவார தலங்களில் 10 வது தலமாகும். இவருக்கு பொற்குடநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு . 

கோயில் அமைப்பு : 

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்ற சிறிய கிராமத்தில் பழமை மாறாமல் இக்கோயில் காட்சிதருகிறது . நான்கு புறமும் மதில் சுவர்களுடன் ஒரு முகப்பு வாயில் அமைந்துள்ளது , முகப்பு வாயிலுக்கு முன்பு இத்தலத்தின் தீர்த்த கிணறு உள்ளது .  வாயிலை கடந்து உள்ளே சென்றால் கோயிலின் அடுத்த நுழைவு வாயில் வரை இருபுறமும் நந்தவனம் அமைத்துள்ளார்கள் .  நேரே உள்ளே சென்றால் நுழைவு  வாயிலுக்கு முன்பாக நந்தி மற்றும் பலி பீடத்தை நாம் தரிசனம் செய்யலாம் . கொடிமரம் இக்கோயிலுக்கு இல்லை .  நேராக நாம் உள்ளே சென்றால் மூலவர் சன்னதி உள்ளது .  நாம் இப்போது துவாரகபாலகர்களை வணங்கிவிட்டு உள்ளே சென்றால் கருவறையில் இறைவன் ருட்ரஅக்ஷர  பந்தலின் கீழ கருணையே உருவமாக அருள்தருகிறார் .  ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரி அன்று அதிகாலையில் இறைவன் திருமேனி மீது சூரிய ஒளி விழுகிறது . 

சனகர் , சனகாதி முனிவர்கள் நால்வர்களும் இக்கோயிலுக்கு வந்து வணங்கியுள்ளார்கள் . வெளிப்பிரகாரத்தில் நால்வர்கள் சன்னதியில் திருஞானசம்பந்தர் கையில் தாளமின்றி கை கூப்பிய நிலையிலும் , சுந்தரர் நடனம் ஆடுவது போலும் உள்ளார்கள் .  இதற்கான காரணம் திருத்தல யாத்திரையின் போது  திருஞானசம்பந்தர் இத்தளத்திற்கு வந்தபோது  இருட்டி விட்டதாகவும்,  அப்போது  சிவபெருமான் கட்டளைப்படி  அம்பாள்  சம்பந்தருக்கு  வழிகாட்டியதாகவும்,  சிவபெருமானை வணங்கி அற்புத தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் சம்பந்தர்  நடனம் ஆடிக்கொண்டு  பதிகம் பாடியதாகவும் ஒரு செய்தி உள்ளது. 

அப்படியே நாம் வலம் வந்தால் விநாயகர் சன்னதி , வள்ளி, தெய்வயானை சமேதராக முருகர் உள்ளார் . முருகர் சன்னதிக்கு பின் காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் லட்சுமி நாராயணர் சன்னதிகள் உள்ளன. அம்பாள் சன்னதி தனி கோயிலாக அமைந்துள்ளது . தாயார் நீலமலர்கன்னி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் கேட்பவர்களுக்கு அன்பை வாரி தருபவராக காட்சி கொடுக்கிறார் . 

தல வரலாறு : 

ஒரு காலத்தில் வயல்கள் நிறைந்த இப்பகுதி  மக்கள் செல்வச் செருக்கினால் இறை வழிபாட்டைப்  புறக்கணித்து  இருந்தனர். அவர்களுக்கு உணர்த்த இவ்விடத்தில்  பெருமழை பெய்விக்க  ஏரி குளங்கள் நிரம்பி வழிந்தன. ஏரி உடைந்து தண்ணீர்  வெள்ளமாக  ஊருக்குள் வர  மக்கள் இறைவனிடம்  தஞ்சமடைந்தனர். இறைவன் ஒரு வாலிப வடிவில்  நெல் மூட்டைகளை  அணையாக அடுக்கி  வெள்ளத்தைத்  தடுத்து  அவர்களைக் காத்தான்.  மக்கள் அந்த  வாலிபனைப்  போற்ற,  வாலிபனாக வந்த அந்த சிவபெருமான் இறைவனே சிறந்த காப்பு என்பதை அவர்களுக்கு எடுத்த்துரைத்து அவர்கள் இழந்த பொருள் பெற தங்கக் குடத்தைக் கொடுத்து மறைந்தார். அதனால் இறைவனுக்குச் சொர்ணகடேஸ்வரர் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

கல்வெட்டு

இவ்வூர்க் கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன் இவர்கள் காலங்களிலும், பல்லவமன்னரில் சகலபுவனசக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர், விசயநகர பரம்பரையில் வீரப்பிரதாபகிருட்டிணதேவ மகாராயர் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் `பொற்குடங் கொடுத் தருளிய நாயனார்` என்னும் பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

இத்திருக்கோயிலில் கூத்தாடுந் தேவரை (நடராசப் பெருமானை) எழுந்தருளுவித்தவர் கங்கைகொண்ட சோழவள நாட்டுத் திருமுனைப்பாடிநாட்டுக் கீழையூரில் இருந்த இராஜேந்திர சோழசேதி ராயர் ஆவர். அத்திருமேனி எழுந்தருளுவிக்கப்பெற்ற காலம் முதற் குலோத்துங்கசோழதேவரின் நாற்பத்தெட்டாம் ஆண்டாகும். இக் கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் மிலாடு ஆகிய சனனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்திற்கு உட்பட்ட ஊராகக் குறிக்கப் பெற்றுள்ளது.

Photos:

https://alayamtrails.blogspot.com/2023/08/sri-swarnakadeswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் : 

காலை 6 . 00 மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 4 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை . 

Contact Details :  7826090451, 6374373032 

குருக்கள் வீடு அருகிலே உள்ளதால் நீங்கள் அங்கு சென்று அவரை தொடர்பு கொள்ளவும் . 

This swarnakadeswarar temple is one of the thevara hymns place dedicated to god shiva.10th thevara sthalam in Nadunadu. It is believed that sages Sanaka, Sanatana, Sanandhana and Sanatkumara have worshipped Lord Shiva here. Other than the shrines of the main deities, there are shrines and idols of lords Vinayakar, Nataraja, Murugan with his consorts, Selva Vinayakar, Nalvar, Dakshinamurthy, Brahma, Spadika Lingam, Lingothbavar, Navagraham, Kasi Viswanathar and Visalakshi, Lakshmi Naarayanar, Durgai, Chandikeswarar and Chandikeswari.

செல்லும் வழி : 

உளுந்தூர்பேட்டை யிலிருந்து  திருக்கோயிலூர் செல்லும் வழியில்  (வழி-  எலவானாசூர்கோட்டை)  நெடுஞ்சாலையில் வந்து “எறையூர்” அடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வந்து (வடகுரும்பூர் வழியாக) 4-கி. மீ. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். எறையூர் – நெய்வெணை நகரப் பேருந்து செல்கிறது. திருக்கோயிலில் இருந்து  எலவானாசூர்கோட்டை செல்லும் வழியில் எறையூர் சென்று இத்தலத்தை அடையலாம் . 

அருகில் உள்ள கோயில்கள் : 

1 . அர்த்தநாரீஸ்வரர் கோயில் – ரிஷிவந்தியம் 

2 .  உலகளந்த பெருமாள் கோயில் – திருக்கோயிலூர் 

3 . வீரடீஸ்வரர் கோயில் – திருக்கோயிலூர் 

4 . அதுல்ய  நாதேஸ்வரர் கோயில் – திருக்கோயிலூர்  

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply