Sri Swetha Vinayagar (vellai Vinayagar) Temple-Thiruvalanchuli

Sri Swetha Vinayagar(Vellai Pillayar) Temple-Thiruvalanchuli
Main Gopuram

ஸ்ரீ திருவலஞ்சுழி ஸ்வேதா விநாயகர் (வெள்ளை விநாயகர் ) கோயில்

விநாயகர் சதுர்த்தி வரும் இந்த வாரத்தில் இந்த திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயிலை பற்றி என்னுடைய india temple tour இணையத்தில் எழுவது மிக பெருமையாக கருதுகிறேன்.

விநாயகர் கோயிலின் முதல் படை கோயிலாகும் . சதுர்த்தி அன்று மிக விழாவாக கொண்டாடப்படுகிறது மற்றும் அன்றைய தினம் முக்கோடி தேவர்களும் இத்தலத்திற்கு வருகை தருவார்கள் என்று நம்பப்படுகிறது .

Vellai Pillaiyar -Thiruvalanchuli
Vellai Pillaiyar( thanks to google)

* இங்குள்ள விநாயகர் மிகவும் சிறப்பு வாழ்ந்தவர் ,இவருக்கென தனி சன்னதி  உள்ளது .இவர் இங்கு வெள்ளை நிறத்தில் காணப்படுவதால் வெள்ளை பி ள்ளையார் என்று அழைக்கப்படுகிறார் .

* பாற்கடலை கடையும் போது ஏற்பட்ட அமுத கடல் நுரையினால்  ஏற்பட்ட  விநாயகர் என்பதால் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் .இவர் சுயம்புவாக காட்சி தருகிறார் .

* தேவேந்திரன் அகல்வியாவின் சாபத்திலிருந்து விடுபட விநாயகரை கையில் சுமந்தபடி பூலோகத்தில் உள்ள சிவ தலங்களுக்கு சென்று தினமும் பூஜை செய்துவந்தார் ,அப்போது இத்தலத்திற்கு வந்தபோது சிவன் சிறுவனாக வந்து இந்திரனுக்கு முன்னாடி காட்சி அளித்தார் அப்போது இந்திரன் சிறுவனான சிவனிடம் தான் நீராட செல்லவேண்டும் அதுவரை விநாயகர் உள்ள பெட்டியை வைத்திருக்குமாறு கூறினார் . சிவன் அந்த விநாயகர் உள்ள பெட்டியை அங்கேயே கீழே வைத்து விட்டு மறைந்துவிட்டார் இந்திரன் வந்து பாத்த போது சிறுவன் இல்லை உடனே பிள்ளையாரின் பெட்டியை எடுக்க முற்பட்டார் ஆனால் எடுக்கமுடியவில்லை பின்பு விஸ்வகர்மாவை வைத்து விநாயகரை சுற்றி இந்திர ரதம் செய்து எடுத்து செல்ல முற்பட்டார் அப்போதும் முடியவில்லை . அப்போது விநாயகர் அசிரீரி மூலம் நான்  இங்கேயே இருப்பதாகவும் விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு வந்து தன்னை வணங்கினால் தினமும் வணங்கியதற்கு சமம் ஆகும் என்றார் . ஆதலால் இக்கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள் மிக அற்புதமாகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும் .

*விநாயகர் சுயம்பாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் ,அலங்காரம் .பூக்கள் சாத்தப்படுவதில்லை ,பச்சை கற்பூரத்தை பொடி செய்து மட்டுமே சாத்துவார்கள் . 

* விநாயகர் 10 படை வீடுகளில் இத்தலமும் ஒன்று .

வெள்ளை பிள்ளையார் சன்னதியின் முன் உள்ளது கருங்கல் சன்னல் . இது ஏழு அடி அகலமும் ஒன்பது அடி உயரமும் கொண்டது ,நெடுக உள்ள கற்கள் முமூர்த்திகளையும் , 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகளையும் அஷ்ட ஐஸ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும் ,111 கண்களும் மந்திரங்களையும் ,10 யாளிகள் எட்டு திசைகளையும் ஆகாயம் ,பாதாளம் என 10 திசைகளையும் ,49 மலர்கள் ஆகமங்கள் ,புராணங்கள் ,இதிகாசங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன . இவ் சன்னலின் வழியே விநாயகரை தரிசித்தால் சகல மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் .

இவ்வளவு பெருமைகள் உடைய இத்தலத்தை ஒருமுறையேனும் தரிசித்து விநாயகரின் அருளை பெற்று வாழ்வில் இன்புற்று வாழ கேட்டுக்கொள்கிறேன் .

இக்கோயிலில் உள்ள தேவார பாடல் பெற்ற ஸ்ரீ திருவலஞ்சுழிநாதர் தரிசித்து எம்பெருமானின் அருளையும் பெற்று தீர்க்க ஆயுளுடன் வாழ்வோமாக .

* கோயில் மிக பிரமாண்டமாக பெரியதாக இயற்கை அழகோடு மரங்கள் சூழ அமைந்திருக்கிறது.

அமைவிடம் மற்றும் செல்லும் வழி 

சுவாமிமலை அருகில் உள்ளது இங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம் இதன் அருகிலேயே பட்டிஸ்வரம் கோவில் மற்றும் திவ்ய தேசத்தில் ஒன்றான திருப்புள்ளம் பூதங்குடி உள்ளது . கும்பகோணத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன .

கோயில் திறந்திருக்கும் நேரம் 

காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை 

மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை 

Content Thanks to ganeshnlr.blogspot.com

2 Comments

Leave a Reply