அருமிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் – பட்டீஸ்வரம்
கும்பக்கோணம் என்றாலே கோயில்களுக்கு பெயர் போன இடம் . கும்பகோணத்திற்கு temple tour செல்பவர்கள் கண்டிப்பக இந்த இடத்திற்கு செல்லலாம் .
மூலவர் : பட்டீஸ்வரர்
தாயார் : பல்வளைநாயகி , ஞானாம்பிகை
தீர்த்தம் : ஞானவாவி
தல விருச்சம் : வன்னி
மாவட்டம் : தஞ்சாவூர்
ஊர் : பட்டீஸ்வரம்
- தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 86 வது தலம். தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரையில் 23 வது தலம் .
- திருஞானசம்பந்தர் அடியார்களுடன் நடந்து திருசக்திமுற்றத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு பின்பு அடியார்களுடன் பட்டீஸ்வரம் சென்று வணங்க சென்றார் அப்போது சூரியனின் வெப்பம் அதிகம் உள்ள முதுவேனிற்காலமானதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது . உடனே பட்டீஸ்வரர் பெருமான் அவருக்கு பூத கணங்களின் மூலம் முத்து பந்தலை அனுப்பிவைத்தார் . பூதகணங்களும் சம்பந்தருக்கு திருமுடியின் மேல் தூக்கிவந்தனர் பின்னர் அவர்கள் சம்பந்தரிடம் பெருமான் அருளியதை கூறினர். இக்காட்சியை காணவும் , சம்பந்தர் தன்னை தரிசிக்கவும் நந்தி தேவரை விலகும்படி கட்டளையிட்டார் . நந்தியும் நகர்ந்தது. நந்தி நகர்ந்திருக்கும் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும் .
- சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்
- இங்குள்ள துர்கை மிக பிரசித்திபெற்றது. இவர் இங்கு சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறார் . இவருக்கு எலுமிச்சை மாலை அளித்து வழிபடுகிறார்கள் . இவரை வணங்கினால் ராகு கேது ,செவ்வாய் தோஷம் விலகும் .
- சோழர்களின் ஆத்மார்த்தமான அம்மனாக இவ் கோயிலின் அம்பாள் விளங்கினார் , சோழர்களால் கட்டப்பட்ட தலம் .
- பைரவர் சன்னதி மிக பிரபலமானது . தோஷங்கள் போக இவரை வணங்குகின்றனர் .
- பட்டீஸ்வரரை வணங்கினால் துயரம் நீங்கி மனம் அமைதி கிட்டும் . மற்றும் பதவி உயர்வு ,தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்காக இவரை வேண்டினால் நிச்சயம் ஆசீர்வதிப்பார் .
திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி:
காலை 6 மணி முதல் 11 .00 மணி வரை மாலை 4 .௦௦ மணி முதல் 8 .30 வரை .
சுவாமி மலை அருகில் உள்ளது . கும்பகோணத்திலிருந்து மிக அருகில் உள்ள தலம் .
Location Map :