Sri Thirunareeswarar Temple – Kandamangalam , Villupuram

ஸ்ரீ திருநாரீஸ்வரர் கோயில் – கண்டமங்கலம்

Sri Thirunareeswarar Temple - Kandamangalam

இறைவன் : திருநாரீஸ்வரர்

இறைவி : திரிபுரசுந்தரி

ஊர் : கண்டமங்கலம்

மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு

இந்த கோயில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது . இக்கோயிலை கண்டராதித்த  சோழனால் கட்டப்பட்டது . முற்கால சோழர்களின் கலைப்பாணியில் அமைந்துள்ளது .சோழர் காலத்தில் இந்த ஊர் ஸ்ரீ கண்டராதித்த மங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இக்கோயில் திருநாரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாக இக்கோயிலின் கருவறையின் தென்புறத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது .இக்கோயிலின் கருவறையை சுற்றி நிறைய கல்வெட்டுகள் உள்ளன .

இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை , கோயிலுக்கு நுழைவு வாயில் உள்ளது ,அதை கடந்து உள்ளே சென்றால் பலிபீடம் ,துவாஜஸத்தம்பம் மற்றும் நந்தி உள்ளது .கருவறையின்  முன் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-thirunareeswarar-temple_20.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 – 9 , மாலை 5 -8 மணி வரை

செல்லும் வழி :

பாண்டி – விழுப்புரம் சாலையில் , பாண்டிச்சேரி இருந்து சுமார் 14 km தொலைவிலும் , விழுப்புரத்தில் இருந்து 40 km தொலைவிலும் உள்ளது . சாலை ஓரத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது .

அருகில் உள்ள கோயில் :

1 . பஞ்சாரீஸ்வரர் கோயில் ( பாடல் பெற்ற தலம்) – திருவாண்டார் கோயில்

Location :

Leave a Reply