ஸ்ரீ உச்சிநாதேசுவரர் கோயில் – சிவபுரி (திருநெல்வாயல்)
இறைவன் : உச்சிநாதேசுவரர்
இறைவி : கனகாம்பிகை
தல விருச்சம் : நெல்லி
தல தீர்த்தம் : கிருபா சமுத்திரம்
புராண பெயர் : திருநெல்வாயல்
ஊர் : சிவபுரி
மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு
- தேவார பாடல் பெற்ற வடகரை காவேரி தலங்களில் 3 வது தலமாகும் . தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 57 வது தலமாகும் .
- திருநாவுக்கரசருக்கு உச்சிப்பொழுதில் உணவு அளித்து பசியை போக்கியதால் இவருக்கு உச்சிநாதேசுவரர் என்று பெயர் பெற்றார் .
- சம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம்.
- இக்கோயிலில் குழைந்தைக்கு முதல் உணவு ஊட்டினால் அவர்களுக்கு காலம் முழுவதும் உணவு பிரச்னை ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது.
- சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலங்களில் இந்த தலமும் ஒன்றாகும்.சிவலிங்கத்தின் பின்புறத்தில் சிவா பார்வதியடன் திருமணக்கோலத்தில் அருளுகின்றனர்.
- திருஞானசம்பந்தர் தன்னுடைய திருமணத்திற்காக தன உறவினர்களுடன் சிதம்பரத்தில் இருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு செல்லும் வழியில் மத்திய நேரம் உச்சி வேலை ஆகிவிட்டதால் பசியின் காரணமாக இவரும் கூட வந்த அனைவரும் சிவபுரியேல் உள்ள இக்கோயிலில் தங்கிவிட்டனர் .சம்பந்தர் மற்றும் அவரின் உறவினர்கள் பசியோடு இருப்பதாய் அறிந்து கோயில் உதவியாளர் வடிவில் இறைவன் வந்து அனைவருக்கும் உணவு அளித்தார் .அதனாலேயே அவருக்கு உச்சிநாதேசுவரர் என்ற பெயர் பெற்றார் .
கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 -12 .00 , மாலை 4 .30 – 7 .30 , தொடர்பு எண்: 9842624580
செல்லும் வழி:
சிதம்பரத்தில் இருந்து சுமார் 5 km தொலைவில் உள்ளது .சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து நேராக சென்றால் சிவபுரியை அடையலாம். காலை 9 மணிக்குள் சென்று பார்ப்பது நன்று .
இக்கோயிலின் அருகிலேயே சுமார் 1 /2 km தொலைவில் மற்றொரு பாடல் பெற்ற தலமான பால்வண்ணநாதர் -திருக்கழிப்பாலை அமைந்துள்ளது .
Location: