Sri Ulagalanda Perumal Temple – Kanchipuram(Thirukarvaanam)

உலகளந்த பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்(ஊரகம்)

Sri Ulagalanda Perumal Temple- Kanchipuram

இறைவன் : உலகளந்த பெருமாள் ,திருவிக்ரமன்

தாயார் : கமலவல்லி நாச்சியார்

உற்சவர் : பேரகத்தான்

தீர்த்தம் : நாக தீர்த்தம்

விமானம் : சாரஸ்ரீகர விமானம்

மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமிசையாழ்வார் ,நம்மாழ்வார்

Sri Ulagalanda Perumal Temple- Kanchipuram
  • தன் இடது திருவடியை விண்ணிலும் வலது திருவடியை மாவலியின் தலையிலும் வைத்தபடி காட்சி அருளும் அந்த பிரமாண்டமான அவதாரத்தை தரிசிக்க நம் இரண்டு கண்களும் போதாது என்பது உண்மை .
  • பிரகலாதனின் வம்சத்தில் வந்த மகாபலி அறவழியில் நடக்காமல் போக வானவர் வடிவில் வந்து மகாபலியிடம் தானமாக மூன்று அடிகள் கேட்டார் . இறைவன் வான் ,பூமி ஆகியவற்றை இரண்டு அடிகளாலும் மூன்றாவது அடியை மகாபலியின் திருமுடியில் வைத்து பூமிக்கு அடியில் அழுத்தினார் .
  • இவ் கருவறையிலேயே இடது புறம் “ஊரகம் ” என்ற பெயரில் ஒரு சன்னதி உள்ளது . பெருமாளின் மிக பெரிய உருவத்தை நிமிர்ந்து தரிசிக்க முடியாமல் மாவலி வருந்தும் போது அவருக்காக பகவான் ஆதிசேஷனாக அருள்தருகிறார் . இது ஒரு பிராத்தனை தலமாகும் .இங்கு வந்து வேண்டிக்கொண்டு திருமஞ்சனம் செய்வித்து திருக்கண்ணமுது நைவேத்தியம் செய்தால் குழந்தை பாக்யம் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது .
  • இவ் இரண்டும் சேர்த்து ஒரே திவ்யதேசமாக திகழ்கிறது .
  • இக்கோயிலின் உள்ளே நான்கு திவ்யதேசங்கள் உள்ளன . மற்ற மூன்றும் வேறு எங்கயோ தனித்தனியாக இருந்து காலப்போக்கில் ஏதோ காரணத்தால் இக்கோயின் உள்ளே நிறுவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது .
  • 108 திவ்ய தேசங்களில் 54 வது திவ்ய தேசமாகும் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-ulagalanda-perumal-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 -12 மணி வரை , மாலை 4 -8 மணி வரை

அமைவிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அருகில் காமாட்சி கோயிலுக்கு போகும் வழியில் உள்ளது.

Location :

Leave a Reply