Sri Uma Koppulingeswara Swamy Temple-Palivela

ஸ்ரீ உமா கொப்பலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில் -பள்ளிவேளா (பல்வல புறம்

Sri Uma Koppulingeswara Swamy Temple-Palivela

இறைவன் : உமா கொப்பலிங்கேஸ்வரர்

தாயார் : உமா தேவி

தல தீர்த்தம் : கௌதிகை

ஊர் : பல்வலபுரம்

மாவட்டம் : கிழக்கு கோதாவரி

மாநிலம் : ஆந்திர பிரதேசம்

  • இக்கோயில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பல்வலபுரம் என்ற ஊரில் உள்ளது,இவ்வூர் இப்பொழுது பள்ளிவடா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது , இக்கோயில் கௌஷிகி நதி கரையின் மேல் அமைந்துள்ளது .இவ்வூர் ஐந்து நதிகளால் சூழப்பட்டதாகும் .
  • இக்கோயிலில் உள்ள ஏழு மண்டபங்களில் ஐந்து மண்டபங்கள் மட்டுமே இப்போது உள்ளது ,இரண்டு மண்டபங்கள் அழிந்துவிட்டன , 11 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தை “ராஜா ராஜா நரேந்திர ” மன்னனால் புதுப்பிக்கப்பட்டது .
Sri Uma Koppulingeswara Swamy Temple-Palivela
  • வரலாறு : முன்னொரு காலத்தில் அகத்திய முனிவர் இவ் கௌஷிகாநதி கரையில் தவம் இருந்தார் ,அதே சமயத்தில் கைலாயத்தில் இறைவன் சிவனுக்கும் தாயார் பார்வதி தேவிக்கும் திருமண வைபவம் நடைபெற இருந்தது ,திருமணத்திற்கு அகத்தியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ,சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரால் இறைவனின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை ,இறைவனிடம் திருமணத்தை தான் காணவேண்டும் என்று வேண்டினார் ,இறைவனின் அருளினால் தன் திவ்யதிஷ்டியால் திருமணத்தை கண்டுகளித்தார், அகத்தியர் இறைவனிடம் தான் கண்ட இத் திருமண கோலத்தை இறைவனின் பக்தர்களும் கண்டுகளிக்க வேண்டும் என்று வேண்டினார் ,இறைவன் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப தாயாருடன் இங்கு காட்சிகொடுத்தார் ,இதனாலேயே இங்கு இறைவனை ‘அகத்தீஸ்வரர் ‘என்று அழைத்தனர் .
  • அகத்தீஸ்வரர் கொப்பலிங்கேஸ்வரர் என்று மாற காரணம் :
    இக்கோயில் பூஜைகள் செய்து வந்த பிரோஹிதர் தவறான காரியங்கள் செய்வதாக மன்னருக்கு செய்து கிட்டியது ,மன்னர் இக்கோயிலுக்கு விஜயம் செய்தார்,அப்போது இறைவனின் பிரசாதத்தில் பெரிய முடி இருப்பதை கண்டு கோபமுற்று ப்ரோஹிதரை நோக்கி இது என்ன முடி என்று கேட்டார் இதை கேட்ட பிரோஹிதர் அதிர்ந்து இவ் முடி இறைவனின் சடை முடியாகும் என்று பொய் உரைத்தார் .உடனே மன்னன் தான் இறைவனின் தலையில் காணவேண்டும் என்று கூறினார் ,இதை சற்றும் எதிர்பாராத பிரோஹிதர் இப்போது காணமுடியாது ஏன்னென்றால் இறைவனுக்கு அலங்காரம் செய்துள்ளதால் நாளை காலையில் வந்து பாருங்கள் என்று கூறினார் ,அரசனும் அதற்க்கு இசைந்து நாளை வருவதாக சென்றார் ,மன்னன் நாளை காட்டவில்லை என்றால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்து கிளம்பினார் , அர்ச்சகர் கலங்கியபடி அன்று இரவு முழுவதும் இறைவனை மனம் உருகி வேண்டினார் , மறுநாள் மன்னர் வந்தார் அர்ச்சகர் இறைவனுக்கு தீபாராதனை காட்டினார் ,அப்போது இறைவன் மன்னருக்கு தன் சடை முடியை காட்டினார் இதை கண்டு ஆச்சரியம் உற்ற மன்னன் தன் ஐயத்தை போக்கிக்கொள்ள இறைவனின் தலையில் கை வைத்து இழுக்க பார்த்தான் அதனால் தன் இரு கண்களை இழந்தான் ,பின்னர் அர்ச்சகர் வேண்டுகோளினால் மன்னன் தன் இழந்த கண்களை பெற்றான் . இதனால் இறைவனுக்கு கொப்பலிங்கேஸ்வரர் என்ற பெயர் பெற்றார் .
  • History:   long ago Agathya Maharishi performed meditation on the bank of Kowsiki near Palavalpuram. At the same time wedding of lord Shiva and Parvathi was also taking place.Agasthya wanted attend the kalyanotsavam,but due to some reason he could not attend the wedding function.so he wanted to see the kalyanautsavam with his  divyadrishti.Agathya maharishi prayed parvathi devi and lord shiva to give him dharishanam when parvathi devi and lord shiva gave him dharshanam,Agathiya maharishi requested them to stay there on one peedam in the palvalapuram,so both are stay there and bless the people.
  • Raja raja Narandra Chalukiya  renovated in kalyana mandapam in 11th century. This temple having 7 mandapams are can see 1. Somavari Manatapam,2.Mangalavara mantapam  3. Vuyyala matapam, 4. Nityastana Mantapam and 5. Chilukku dawadasi matapam even today. other matapam are in ruin
  • The original name of the village was Pavalapuram.this temple situated on the bank of Kowsiki.the Rivers around the village palivela disappeared in course of time they are 1. Kowsiki in the east 2. Chandrabhanga on the west,3. Mandavu on the North,4. Kowntheyi and 5. Palvala on the south.the river palval river is flowing underground un seen.so this village called Palvalapuram.

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-uma-koppulingeswara-swamy-temple.html

Opening Time :

Moring 6.00 to 12.00, Evening 5.00 to 8.00

How to Reach

From Rajamundry -163 Km

From Amalapuram-25 Km

From Mandapalli -7 km

Location :

Source: Thanks to Gopuram blog

2 Comments

Leave a Reply