ஸ்ரீ உத்தமர் கோயில் – திருச்சி
இறைவன் :புருஷோத்தமன்
தாயார் : பூர்ணவல்லி
கோலம் : சயன கோலம்
விமானம் : உத்யோக விமானம்
தல தீர்த்தம் : வாழைமரம் (கதலி மரம் )
ஊர் : உத்தமர் கோயில் , திருச்சி
மாவட்டம் : திருச்சி ,தமிழ்நாடு
- பிரம்மா,விஷ்ணு ,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகும் .சைவ ,வைஷ்ணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தலம் .
- சிவபெருமான் பிச்சாண்டவராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்றதால் “பிச்சாண்டவர் கோயில் ” எனவும் .பிரம்மனுக்காக மகா விஷ்ணு கதம்ப மரமாக நின்று காட்சி தந்ததால் “கதம்பனுர் என்றும் ,மும்மூர்த்திகளும் தம்பதி சகிதமாக காட்சி தருவதால் “உத்தமர் கோயில் ” என்றும் அழைக்கப்படுகிறது .
- சப்த குருஸ்தலம் : சிவகுரு தட்சணாமூர்த்தி ,விஷ்ணு குரு வரதராஜர் ,குரு பிரம்மா,ஞானகுரு சுப்பிரமணியர் ,தேவகுரு பிரகஸ்பதி ,அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குருமார்களும் ஒரே இடத்தில கொடுக்கும் மிக அற்புத தலம் .இதனால் இத்தலத்தை “சப்தகுரு தலம் “ என்று கூறுவார்கள் .
- வரலாறு : பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையை சிவன் கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது அதுமட்டும் இல்லாமல் ,பிரம்மாவின் கபாலமும் அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது .எவ்வளவு முயன்றும் அதை கையில் இருந்து பிரிக்கமுடியவில்லை ,அவருக்கு படைக்கப்பட்ட எல்லா உணவுகளையும் அந்த கபாலமே உண்டது .பசியால் சிவன் பிச்சாண்டவர் வேடம் பூண்டு பூலோகத்திற்கு வந்து பல தலங்களுக்கு சென்றார் ,அவ்வாறு இவ் தலத்தின் வழியாக வரும்போது மகா விஷ்ணு மஹாலக்ஷ்மியிடம் அவருக்கு உணவு இடும்படி கூறினார் ,சிவன் மஹாலக்ஷ்மியிடம் தான் படும் துன்பத்தை பற்றி கூறினார் ,மஹாலக்ஷ்மி யோசனை ஒன்றை சிவபெருமானுக்கு கூறினார் அதன்படி சிவனுக்கு அன்னம் அளிப்பதுபோல் பின் நோக்கி சென்றார் அப்போது சிவபெருமானின் கையில் இருந்த கபாலமும் நகர்ந்து சென்றது தன் கையில் இருந்து கபாலம் சென்றவுடன் இறைவன் தன் இருகைகளையும் இருக்க மூடிக்கொண்டார் ,கபாலத்தையும் நொறுக்கிவிட்டார் . லட்சுமி அளித்த உணவை உண்டு பசியாற்றி கொண்டார் .இதனால் தயார் “பூரணவல்லி “என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்
For more beautiful Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-uthamar-temple-trichy.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .00 வரை ,மாலை 4 .00 -8 .00 மணி வரை
தொலைபேசி எண்: 0431-2591466, 0431-2591405
அமைவிடம் :
திருச்சியின் ஒரு பகுதியாகும் இந்த உத்தமர் கோயில். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் – நாமக்கல் செல்லும் வழியில் சுமார் 5 km தொலைவில் உள்ளது.
Location: