Sri Vadagireeswarar Temple ,Rudrakoteeswarar Temple -Thirukalukundram

ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோயில் – திருக்கழுக்குன்றம்

Sri Vedagireeswarar temple- Thirukalukundram

இறைவன் : வேதகிரீசுவரர் (மலைகோயில்), பக்தவசலேசுவரர்

                        (தாழக்கோவில்)

இறைவி : சொக்கநாயகி (மலைகோயில்), திரிபுரசுந்தரி

                   (தாழக்கோவில்)

தலவிருட்சம் : வாழைமரம் (கதலி)

தல தீர்த்தம்  : சங்கு தீர்த்தம் மற்றும் கோயிலை சுற்றி உள்ள 12 

                           தீர்த்தங்கள்

புராண பெயர் : வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம்

ஊர் : திருக்கழுக்குன்றம்

மாவட்டம் : செங்கல்பட்டு , தமிழ்நாடு

பாடியவர்கள் : அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் , மாணிக்கவாசகர்

வழிபட்டவர்கள் : மார்க்கண்டேயர்,  சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமாள் நாயனார், சேக்கிழார் ஆகியோர்

கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே

    நின்ற பாவ வினைகள்  தாம்பல நீங்கவே

    சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்

    கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே

  • சுந்தரர் 

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவத்தலங்களில் இத்தலமானது 28 வது சிவ தலமாகும் .

வேதமே  மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் “வேதகிரி” எனப் பெயர் பெற்றது.மலைமேல் ஒரு கோவிலும், ஊருக்குள் ஒரு கோவிலும் உள்ளது. இவை முறையே திருமலைக் கோவில், தாழக்கோவில் என்றழைக்கப்பபடுகின்றன.

பக்தவசலேசுவரர் கோயில் (தாழ கோயில்)

ஊரின் நடுவே பேருந்து நிலையத்தின் மிக அருகில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு புறமும் கோபுரத்துடன் கூடிய நுழைவு வாயிலுடன் இக்கோயில் அமைந்துள்ளது . ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி  ராஜகோபுரத்தின் வழியாக நாம் உள்ளே நுழைந்தால் நாம் முதல் பிரகாரத்தை அடையலாம் . இப்பிரகாரத்தில்  நான்கு கால் மண்டபம் உள்ளது . வலதுபுறத்தில் உள்ள அலுவலக சுவற்றில் அழகிய அஷ்டபுஜ துர்க்கை சிற்பம் உள்ளது .இடது புறத்தில் அழகிய சிற்பங்கள் கூடிய 16 கால் மண்டபம் உள்ளது .

அடுத்து ஒரு கோபுரம் உள்ளது கோபுரத்தின் இருபுறத்திலும் விநாயகர் மற்றும் முருகர் சன்னதிகள் உள்ளது . வலது புறத்தில் நந்தி தீர்த்தம் உள்ளது .

இரண்டாவது பிரகாரத்தை நாம் வலம் வந்தால் சோமஸ்கந்தர் சன்னதி , மாணிக்கவாசகர் சன்னதி ,பாணலிங்கம் இல்லாமல் ஆவுடையார் மட்டும் உள்ள ஆவுடையார் சன்னதி ,

ஏகாம்பரநாதர், தல விநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேசுவரர்,ஆறுமுகப் பெருமான் சன்னதி அதனை தொடர்ந்து   அருணாசலேசுவரர் சன்னதி உள்ளது .

திரிபுரசுந்தரி :

அப்படியே நாம் தொடர்ந்தால் இறைவி திரிபுரசுந்தரி அழகான முன்மண்டபத்துடன் கூடிய சன்னதியில் வீற்றியுள்ளார் . கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள். மதுரையை போன்று திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலில் அம்மனுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது . இங்கு நடைபெறும் உற்சவங்கள் அம்மனுக்கே நடைபெறுகின்றன .

சுமார் 6 அடி உயரத்தில் அம்மன் பத்ரபீடத்தின் மீது பத்மபீடத்தில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் .மகா பெரியவர் இங்கு ஸ்ரீ சக்கரம் கொடுத்துள்ளார் என்ற செய்தியும் உள்ளது . திரிபுரசுந்தரி அஷ்டகந்த மூலிகைகளால் உருவாக்கப்பட்டுளார் , எனவே வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே முழு அபிஷேகம் நடைபெறும் . அவைகள் முறையே ஆடி உத்திரம் ,நவராத்திரி நவமி மற்றும் பங்குனி உத்திரம் போன்ற தினங்களில் நடைபெறும் . கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தளம் பரிகார தலமாகும் .இங்கு ராசி சக்கரம் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தின் மேல் விதானத்தில் இருப்பதாய் காணலாம் .அம்மனை பார்த்தவாறு வேதகிரீஸ்வரர் இருப்பது இங்கு விசேஷமாகும் .

வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்ற வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்துமூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார்.

பக்தவத்சலேசுவரர்:

சதுரபீட ஆவுடையாரில் சற்று பெரிய லிங்க திருமேனியாக மிக அழகாக காட்சி தருகிறார் . கருவறை ‘கஜப்பிரஷ்ட’ அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர் உளர். சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது.

கல்வெட்டுகள் :

கல்வெட்டில் இத்தலம் ‘உலகளந்த சோழபுரம்’ என்று குறிப்பிடப்படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது. 7 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

சங்கு தீர்த்தம் :

தாழக்கோயிலின் ராஜகோபுரத்தின் எதிரே சற்று தூரம் நடந்து சென்றால் மிக பெரிய கடல் போல் இந்த சங்கு குளம் உள்ளது .  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார்.

மலைக்கோயில் :

தாழக்கோயிலுக்கும் , சங்கு தீர்த்தத்துக்கு மிக அருகிலேயே இந்த மட கோயில் உள்ளது . மலை மீது ஏறுவதிற்கு முன் அழகிய நுழைவு வாயில் உள்ளது . உள்ளே நுழைந்ததும் ஒரு மண்டபம் உள்ளது . இங்கு விநாயகர் சன்னதி உள்ளது . மலை ஏறுவதிற்கு முன் நுழைவு சீட்டு பெற்று கொண்டு ஏறவேண்டும் . சுமார் 550 படிக்கட்டுகள் உள்ளன . அதில் சுமார் 150 படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளது .மேலே ஏறியவுடன் நாம் மலைக்கோயிலை அடையலாம் .

மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும், 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது.மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர். கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில ஆண்டுகள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றுள்ளன. இப்போது அவைகள் வருவதில்லை.

ஈசனை இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான். தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து, சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம்.

தேவாரம் பாடிய மூவரும் இம்மலையே சிவரூபமாக எண்ணி அதன் மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிந்தபடியே பதிகம் பாடினர். அவர்கள் அவ்வாறு பாடிய இடம் ‘மூவர் பேட்டை’ என்று வழங்கப்படுகிறது. இங்கு மாணிக்கவாசகரையும் சேர்த்து நால்வர் கோயில் ஒன்று உள்ளது.இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் அமைந்துள்ளன ,அவைகள்  1. இந்திர தீர்த்தம் , 2. சம்பு தீர்த்தம், 3. உருத்திர தீர்த்தம், 4. வசிட்ட தீர்த்தம், 5. மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், 7. மார்க்கண்ட தீர்த்தம், 8. கோசிக தீர்த்தம், 9. நந்தி தீர்த்தம், 10. வருண தீர்த்தம், 11. அகலிகை தீர்த்தம், 12. பட்சி தீர்த்தம்

பௌர்ணமி கிரிவலம் :

வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். வலம்வரும் வழியில் மருந்து மலைச்சாரல் “சஞ்சீவி” காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத்தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை சங்கு தீர்த்தத்தில் நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகைக் காற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூட போய்விடும்.

குடைவரைக்கோயில் :

மலையில் இருந்து கீழ் இறங்கும்போது  பல்லவன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது.இதை ஒரு கல் மண்டபம் குடைவரை கோயில் என்று அழைப்பார்கள் . இது சிவனுக்குரிய குடைவரை கோயிலாகும் .

கி.பி. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரையின் முக மண்டபத்தின் வடபுறத்தில் முழுத்தூணின் மேற்சதுரத்தில் கிழக்கு முகத்தில் மிகவும் சிதிலமடைந்த நரசிம்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. மேலும் இங்கு பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன.

குடைவரை முகப்பில் சதுரம் கட்டு சதுரம் என்ற வடிவத்தில் அமைந்த நான்கு தூண்கள் காணப்படுகின்றன. தூண்களின் கீழ் மற்றும் மேல் பாகங்கள் சதுரமாகவும் இடையில் எட்டுப்பட்டைகளுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத் தூண்களும் நடுவில் இரண்டு முழுத்தூண்களும் அமைந்துள்ளன. தூண்களின் மேற்புறத்தில் அமைந்துள்ள பெரிய வடிவிலான போதிகைகள் உத்திரத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.

முகப்புத் தூண்களை அடுத்து குடைவரையின் மையப்பகுதியில் இதேபோன்ற அமைப்பில் மேலும் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்புத் தூண்கள் பகுதியிலிருந்து இரண்டாவது வரிசைத் தூண்கள் வரை உள்ள பகுதியானது முக மண்டபம் என்றும், இரண்டாவது வரிசைத் தூண்களிலிருந்து கருவறை வரை உள்ள பகுதியானது அர்த்த மண்டபம் எனவும் அழைக்கப்படுகிறது. முகமண்டபத்தின் வடக்குப்புறம் மற்றும் தெற்குப்புறச் சுவர்களில் நின்ற நிலையில் மனித  சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையின் உள்ளே லிங்கத் திருமேனி அமைந்துள்ளது.  கருவறையின் முகப்பில் இரு புறங்களிலும்  துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். கருவறையின் வெளியே தெற்குப் பகுதியில் பிரம்மதேவனும் வடக்குப் பகுதியில் மகாவிஷ்ணுவும் நின்ற கோலத்தில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். இந்தத் திருக்கழுக்குன்றம் குடைவரை கோயிலானது  இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விழாக்கள் :

லட்சதீப திருவிழா, சித்திரை திருவிழா, விடயாற்றி உற்சவம், திரிபுரசுந்தரி அம்மன் திருவிழா, திருக்கல்யான திருவிழா, நவராத்திரி திருவிழா, கார்த்திகை தீப திருவிழா, தெப்ப திருவிழா, சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சுந்தரர் திருவிழா, மாசி மகம், சேரமானுடன் கைலாயம் செல்லும் விழா, புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான், பவித்ரோற்சவம், மானிக்கவாசகர் திருவிழா.

திறந்திருக்கும் நேரம் :

தாழக்கோவில் தினந்தோறும் காலை 06:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலையில் 04:00 மணி முதல் இரவு 08:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மலைக்கோவில் தினந்தோறும் காலை 09:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலையில் 04:30 மணி முதல் 07:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Photos:

https://alayamtrails.blogspot.com/2025/03/sri-vedagireeswarar-temple.html

Phone Number :

+91-44- 2744 7139, 94428 11149

அமைவிடம் :

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் இருந்து தனியாக பிரியும் சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம் . செங்கல்பட்டிலிருந்து சுமார் 14 km தொலைவில் உள்ளது .

Location Map :

திருச்சிற்றம்பலம்

English

This is the 28th Shiva head of the throat of the Devaram song.

Since the Veda is the mountain, the site is known as “Vedagiri”. These are called the Tirumalai Temple and Thakkovil respectively.

Bhaktavasavalaswarar Temple (Lower Temple)

The temple is located in the middle of the city with the entrance of the tower on the four sides of the 12 acres of land near the bus station. If we enter through the Rajagopuram to the east with the seven -level Rajagopuram, we can reach the first principle. There is a four -legged hall in this area. The office wall on the right has a beautiful Ashtabuja Durga sculpture.

Next there is a tower on both sides of the tower. There is Nandi Theertham on the right.

If we come to the second Prakara, Somaskandar Shrine, Manikavasakar Shrine, Panalingam

Ekambaranathar, Thala Vinayakar Vandhuvana Vinayakar, Jambukeswarar, Arumugab Peruman Shrine followed by the Arunachaleswara Shrine.

Tripurasundari:

If we continue, Lord Tripurasundari is in a beautiful shrine with a beautiful front. Amman Tripurasundari blesses the east at the sanctum sanctorum. Amman is given importance in the temple of Tirukkurukkundram, like Madurai. The festivals are held here for Amman.

At about 6 feet high, Amman stands on the Padmapithi with four arms. Tripurasundari is made up of herbs, so only the full anointing is held only three times a year. They will be held on days such as Adi Uthram, Navratri Navami and Panguni Uthram respectively. The site is the site for the virgins.

Bhaktavatsuleswarar:
In the square oatar, he is a little larger Linga Thurmani. The sanctum sanctorum is ‘kajaprastha’. As the Koshtamuttu, Lord Ganesha, Dakshinamoorthy, Ilinka, Brahma, Durga, There is Chandeswarar. On the other hand there is a tirtha well.

Inscriptions:
In the inscription, this site is referred to as the ‘World Cholapuram’. It is one of the 24 downs of the throat. 7th century Pallavar. Inscriptions of the Chola, Pandiyar and Rashtrakudar period have been found.

Sangu Theertham:

The conch is like the largest sea if you walk a little farther in front of the Rajagopuram of the lowland. The conch is born in this field every twelve years. It is said that the Sangam was placed in the temple, and that the Lord had produced the Sangam to worship the Lord without worshiping the Lord.

So far, there have been many Valamburi Sangams. Once the new conch appears, the old sangha will be kept in the ornamental room. The old associations are concentrated here. The foam is seen in the pond as a sign of the appearance of the conch. The next day will hear the sound of the Ongara. The conch is exposed and floating in the water. Ready, the priests will go in the middle of the pond, take it, clean it, flow, flower, and then take it into the devotee Vatsalar temple. Leave the old sangin in the ornamental room so that he will anoint.

Mountain Temple:
The monastery is located close to the temple and the Sangu Theertham. There is a beautiful entrance before climbing on the mountain. There is a hall when you enter. Here is the Ganesha shrine. Before climbing the mountain, get a ticket and climb. There are about 550 stairs. About 150 stairs are vertical.

About 4 km of the hill. The royal Rajagopuram with a height of 500 feet and a height of the mountain is located with a prakara. The name of the eagle was named after the eagle. The curse of the curse, the eagles of the first era, the eagles of Prasandan, the eagle in the second era, the eagles of Jatayu, the sambukuttan, the eagles of the third era, the sambu and the adi of the fourth era were worshiped respectively. Two eagles arrived at the summit of the hill every day and had been feeding until a few years ago. Now they are not coming.

Indra worshiped Eisan in this place. As a sign of continuing to worship today, the sanctum sanctorum on the hill falls through the nearest cavity and spreads around the Shiva Lingam. The unbearable heat can be seen when the sanctum opens the next day.

The trio who sang the Devaram, thought of this as the Shivarupam, and feared to climb on top of it. The place where they sang is given as a trio. There is a four -year -old temple along with the gem.

There are 12 tirthas around the mountain, they are 1. Indira Theertham, 2.

Pournami Girivalam:
Girivalam was launched by four people that the Lord should come and receive the grace of the Lord as the Veda is a mountain. So the full moon is very special in this place. On the way, there is a place where the drug is “Sanjeevi” wind blowing. There are plenty of people who are sitting here and breathing the herb air. Since the four mountain ranges are full of mullahs, if you come to the temple in the morning of the morning, the herbal air will be gone.

Temple:
When the Pallavan Mahendravarman era is coming down from the mountain, there is a temple in the temple. It is called a stone hall. It is the temple of Lord Shiva.

AD The 7th century inscription is found in the north side of the facial hall of the 7th century. There are also inscriptions of the Pallavar, Chola, Pandiyar and Rashtrakudar period.

There are four pillars in the form of a square square in the face of the umbrella. The pillars are placed with eight bands between the bottom and the upper parts of the pillars. There are two half pillars on the side and two full pillars in the middle. Large -shaped tendons located on the top of the pillars hold the strategy.

Four more pillars are set in a similar setting in the center of the umbrella following the pillars. The area from the area to the second row pillars is the facial hall, and the second row pillar to the sanctum is called the Art Hall. Human sculptures are beautiful as the northern and south walls of the face of the face.

Inside the sanctum sanctorum is located. Dwarapalas are displayed on both sides of the facade of the sanctum. Brahmadevan on the south of the sanctum and Mahavishnu in the north have been set up in the kolam. The temple is under the control of the Indian Archeology Department.

Leave a Reply