ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில் – கோயம்பேடு
மூலவர் – வைகுண்டவாசர்
உற்சவர் : பக்தவச்சலர்
தாயார் – கனகவல்லி தாயார்
விருச்சகம் – வில்வம் , வேம்பு
தீர்த்தம் – லவசதீர்த்தம்
புராண பெயர் : குசலவபுரி
ஊர் : கோயம்பேடு , சென்னை
கோயிலின் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது .12 ஆம் நூற்றாண்டில் குலதுங்க சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். உள்ளே நுழைந்தால் கொடிக்கம்பத்தை காணலாம் . இடதுபுறம் இரண்டு வில்வ மரங்கள் ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது இதை சிவா விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகிறது . அதனால் இதை பார்வதி சுயவரம் விருச்சம் என்று பெயர் . கல்யாண தோஷம் நிவர்த்தி செய்ய ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இவ் விருச்சகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர் .
கருவறை முன் மண்டபத்தில் வால்மீகி மகரிஷி லவன் , குசன் உடன் சேர்ந்தார் போல் உள்ளார் . வால்மீகி மகரிஷி அமர்ந்த நிலையில் அவருக்கு இருபுறம் லவன் , குசன் இருவரும் அவரை வணங்கியபடி இருக்கிறார்கள் . இங்கு சீதை கற்பவதியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இங்கு வால்மீகி வசித்ததற்கான அடையாளமாக புற்று ஒன்று உள்ளே இருக்கிறது .
அனுமன்,லக்ஷ்மணன் இல்லாத ராமர் மற்றும் சீதா காட்சியளிக்கிறார் ஏனென்றால் சீதாவை காண ராமர் அரச கோலத்தில் வராமல் மரவுரி தரித்த கோலத்தில் காட்சிதருகிறார் .இக்கோலத்தில் காண்பது மிக அபூர்வம் . இக்கோவிலின் வெளியே லவசதீர்த்ததில் பிற்காலத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டது .
இப்போது சாயா விமானத்தின் கீழ் வீற்றியிருக்கும் வைகுண்டவாசரை தரிசிக்கலாம் . வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் ஆனால் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார் . ஸ்ரீதேவி , பூதேவி தாயாரும் நின்றபடியே காட்சிதருகிறார் .
இப்போது நாம் கோயிலை வலம் வந்தால் கனகவல்லி தாயார் சன்னதியை அடையலாம் . தாயாரை வணங்கிவிட்டு நாம் வலம் வந்தால் ஆண்டாள் நாச்சியார் சன்னதியை அடையலாம் .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6.30 முதல் 11.00 வரை மாலை 4 மணி முதல் இரவு 8.45 வரை
செல்லும் வழி:
கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி பாலத்தின் இடது புறத்தில் குறுங்காலீஸ்வரர் கோவிலின் அருகில் உள்ளது . அதன் அருகிலேயே இக்கோயிலையும் நாம் காணலாம் .