வைத்தியநாதர் கோவில் -வைத்தீஸ்வரன் கோவில்
மூலவர் – வைத்தியநாதர்
தாயார் – தையல்நாயகி
தலவிருச்சகம் – வேம்பு
தீர்த்தம் – சித்தாமிர்தம்
பழமை – 2000 வருடங்கள் முற்பட்டது
மறுபெயர் – புள்ளிருக்குவேளூர்
ஊர் – வைத்தீஸ்வரன் கோயில்
மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு
தேவார பாடல் பெற்ற காவேரி வடகரையில் இது 16வது தலம் . தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 16 வது தலமாகவும் .
வைத்தியநாதர் :
இவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக வீற்றியிருக்கிறார் . இக்கோவிலில் எல்லா நவகிரகங்களும் ஈசனின் பின்புறத்தில் ஒரே நேர்கோட்டில் உள்ளனர் .ஈசனுக்கு அடங்கி நவகிரகங்கள் உள்ளதால் ஈசனை வணங்குவர்களின் கிரக பலனை சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி செய்கிறார் .வைத்தியநாதர் மருந்தை தினமும் சாப்பிட்டுவந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு . இங்குள்ள மரகத லிங்கம் சிறப்பு வாய்ந்தது .
தையல்நாயகி :
தையல்நாயகிக்கு புடவை சாத்துதல் ,அபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு செய்வது பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது . மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் தாயாருக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வார்கள் .இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் நீங்கும் .
செல்வமுத்துகுமார் :
இவருக்கு அர்த்தசாமபூஜை ரொம்ப விசேஷமானது .இரவு 9 மணிக்கு நடக்கும் பூஜையில் புனுகு ,பச்சை கற்பூரம் ,சந்தனம் ,எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம் ,பால் அன்னம் வைத்து பூஜை செய்வர் . இந்த சந்தனம் மற்றும் திருநீறு நோய் தீர்க்கவல்லது .இங்கு முத்துகுமாரரே முதன்மையாக உள்ளதால் காலை மற்றும் அர்த்தஜாம பூஜை முதலில் இவருக்கு செய்த பிறகே சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும் . இங்கு எல்லா விழாக்களும் முருகனுக்கே நடக்கிறது .
அங்காரகன் (செவ்வாய் )
நவகிரஹ தலங்களில் இக்கோயில் செவ்வாய் தலமாகும்
இங்கு அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது . செவ்வாய் தோஷத்தால் தடை பட்ட திருமண தோஷங்கள் ,கடன் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகள் ,நிலம் பிரச்சனைகள் ஆகியவை இவரை வணங்கினால் தீரும் . செவ்வாய் கிழமைகளில் இவர் ஆடு வாகனத்தில் எழுந்தருள்வார் .
சித்தாமிர்த தீர்த்தம் :
இத்தல சிவனை சித்தர்கள் அமிர்தத்தால் அபிசேகம் செய்து பல வரங்களை பெற்றனர் அவ்வாறு செய்கையில் ஒரு துளி அமிர்தம் இக்குளத்தில் விழுந்ததால் இக்குளத்திற்கு சித்தாமிர்த குளம் என்று அழைக்கப்பட்டது .இக்குளத்தில் நீராடினால் உடலில் உள்ள அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடலாம் .இக்குளத்தில் 18 தீர்த்தங்கள் உள்ளதாக கூறப்படுகிறது .சதானந்த முனிவரின் சாபத்தால் இக்குளத்தில் தவளை மற்றும் பாம்புகள் இருப்பதில்லை .
திருச்சாந்து :
இங்கு புற்று மண் ,அபிசேக தீர்த்தம் ,வேப்ப இலை ,அபிசேக சந்தனம் ,அபிசேக திருநீறு இவைகளை கொண்டு திருச்சாந்து உருண்டை தயார் செய்யப்படுகிறது .இதை வாங்கி சாப்பிட்டால் தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை உண்டு .தோல் வியாதிகளுக்கு இங்கே கொடுக்கப்படும் புனுகு எண்ணையை தேய்த்து நீராடினால் குணமாகும் . இக்கோயில் 4448 நோய்களை தீர்த்துவைக்கும் தலைமை பீடம் இது .தன்வந்தரி சித்தரின் ஜீவ சமாதி அடைந்த இடமும்கூட .
சடாயுகுண்டம் :
சடாயுவின் வேண்டுதலின் படி ராமபிரான் விபூதி குண்டலத்தில் சிதையடுக்கி சடாயுவின் உடலை இட்டு தகனம் செய்ததால் இவ்விடம் சடாயுகுண்டம் என்று அழைக்கப்படுகிறது .
இத்தல பெருமைகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் இது .
மற்றும் பல மாநிலத்தவரின் குலதெய்வம் என்பதால் தினமும் இங்கே மொட்டை அடித்தல் ,காது குத்துதல் மற்றும் திருமணங்கள் நடை பெறுகின்றனர் .இத்தலத்தில் ஓலை சுவடி ஜோசியம் ரொம்ப பிரபலமானது .
இத்திருக்கோயில் திருக்கைலாய தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமானது .
Photos :
https://alayamtrails.blogspot.com/2022/08/sri-vaitheeswaran-temple.html
செல்லும் வழி :
சிதம்பரத்தில் இருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது .
திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 11 வரை , மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை
Location:
தங்கும் வசதிகள் மற்றும் உணவு விடுதிகள் :
நிறைய தங்கும் விடுதிகள் இங்கே உண்டு . மொட்டை அடித்தால் சுடு நீர் அருகிலேயே குறைந்த பணத்திற்கு தருகிறார்கள் . சாப்பிட ஒரு ஐயர் மெஸ் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் மிக உயர் தரமான சைவ ஹோட்டலுடன் கூடிய அழகிய தங்கும் விடுதி “சதாபிஷேகம் ” என்ற பெயரில் உள்ளது . Hotel Link
http://www.hotelsadhabishegam.com/