Sri Valeeswarar And Kala Bhairavar Temple – Ramagiri

ஸ்ரீ வாலீஸ்வரர் மற்றும் காலபைரவர் கோயில்-  ராமகிரி

Sri Valeeswarar - Kala Bhairavar Temple - Ramagiri

இறைவன் –   வாலீஸ்வரர்

 இறைவி –   மரகதாம்பாள்

  தல தீர்த்தம் –  நந்தி தீர்த்தம்

 ஊர் –  ராமகிரி

 மாவட்டம் –  சித்தூர்,  ஆந்திர பிரதேசம்

 இந்த கோயிலானது ஒரு தேவார வைப்புத்  தலமாகும்.

 இக்கோயில் ஆனது பல சிறப்புகளை கொண்டது.   அவைகள் இத்தலத்தின் குளத்தில் உள்ள நந்திதேவரின்   வாயில் என்றும் நீர் வந்து கொண்டே இருக்கும். கோவிலில் பிரதோஷ வழிபாடு நடப்பதில்லை.  ஏனென்றால் எல்லா சிவன் கோயில்களிலும்  சிவனுக்கு  முன்பாக நந்திதேவர் இருப்பார் ஆனால் இக்கோயிலில் நந்திதேவருக்கு பதிலாக ஆஞ்சநேயர் இருக்கிறார். இதன் காரணத்தை நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

 இக்கோயில் பண்டைய காலத்தில் திருக்காரிக்கரை என்று அழைக்கப்பட்டதாக தெரிகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய தேவார பதிகத்தில்  இடையாற்று தொகை என்ற பதிகத்தில் இந்த தளத்தை  கடங்கள் ஊர்   திருக்காரிக்கரை கைலாயம் என்று பாடியிருக்கிறார்.  இது ஒரு தேவார வைப்புத் தலமாகும்.  இந்த நாமகிரி என்ற பெயர்  ராமாயண காலத்தில் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் ஆஞ்சநேயர் சிவபெருமானின் முன்  அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.

 ராவணனை அழித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம்  போக ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட எண்ணினார் அவர் ஆஞ்சநேயரிடம் காசிக்குச் சென்று சிவலிங்கத்தை எடுத்து வரச் சொன்னார். அதன்படி ஆஞ்சநேயர் காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்தார். அப்போது அங்கு காவலுக்கு உள்ள கால பைரவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் சிவலிங்கத்தை ஆஞ்சநேயர் எடுத்துச் செல்வதைக் கண்டு சினம் கொண்டு அவரிடம் போரிடத் துணிந்தார். அப்போது தேவர்கள் கால பைரவரிடம் ஆஞ்சநேயர் ஒரு நல்ல காரியத்திற்கு சிவலிங்கத்தை எடுத்து செல்வதாக கூறினார்கள். அதனால் பைரவர்   போரிடும் எண்ணத்தை கைவிட்டார். ஆனால் அவர் மனம் நிம்மதி அடைய வில்லை ஆதலால் அவர் சூரிய பகவான் மற்றும் வருண பகவானின் துணைகொண்டு  ஆஞ்சநேயருக்கு  தாகத்தை ஏற்படுத்தினார்.

 ஆஞ்சநேயருக்கு மிகவும் தாகம் ஏற்பட்டது அவர் எங்கேயாவது தான்  அருந்த நீர் கிடைக்குமா என்று தேடி சென்றார். அப்போது  பைரவர் கங்காதேவி இடம் இவ்விடத்தில் ஒரு குளத்தை ஏற்படுத்தி நீரூற்றை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.  அதன்படி கங்காதேவி     குளத்தை உருவாக்கினார்.   நீரை தேடி அலைந்த  ஆஞ்சநேயருக்கு  அங்கு நீர்  இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றார் . ஆனால்  அவரால்    நீரை அருந்த முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் தன் கையில் உள்ள சிவலிங்கத்தை   யாரிடமாவது கொடுத்தால்தான்  தன்னால் நீர் அருந்த முடியும். அவர் அவ்வாறு நினைக்கையில் காலபைரவர் ஒரு சிறுவனாக தோன்றினார். ஆஞ்சநேயர்  முன்பாக அவர் வந்தார் அப்போது ஆஞ்சநேயர்  சிறுவனிடம் சிவலிங்கத்தை  கையில் வைத்திருப்பீர்கள் தான் நீரை அருந்தி விட்டு  வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி அவரிடம் சிவலிங்கத்தை கொடுத்து விட்டுப் போனார்.  சிறுவனாக வந்த காலபைரவர் அந்த  சிவலிங்கத்தை கீழே வைத்துவிட்டு  மறைந்துவிட்டார். நீரை அருந்தி விட்டு வந்து பார்க்கையில் அச்சிறுவன் இல்லாததையும் லிங்கம் கீழே வைத்திருப்பதையும் கண்டார்.  சிவலிங்கத்தை எடுக்க முயன்றார் ஆனால் அவரால் முடியவில்லை,  அப்போதுதான் அவர் உணர்ந்தார்  இது கால     பைரவருடைய  வேலை  என்று  புரிந்தது. அவரை வழிபட்டு அவருடைய அருளால் மற்றொரு சிவலிங்கத்தை பெற்றுக்கொண்டு ராமேஸ்வரம் சென்றார்.

 தனக்கு இப்படி ஒரு நிலை இந்தக்  குளத்தினால்தான்  ஏற்பட்டது என்று  கோபப்பட்டு அனுமன் அங்கிருந்து சிறு மலையை பெயர்த்து குளத்தில் வீசினார். அனுமன் ராமபிரான் வழிபடக் கொண்டு வந்த சிவலிங்கம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதால்    ராம என்ற பெயரையும் அனுமன் வீசிய சிறிய குன்று மலை அதாவது கிரியாக நிலைத்ததால் ராமகிரி என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது .

இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி ‘காரியாறு’ என்றும் பெயருடன் ஓடுகிறது.

மூலவர்  வாலீஸ்வரர் சுயம்பு மூர்த்தி ஆவார் , சற்று சாய்ந்த நிலையில் உள்ளார். வாலால் சுற்றியிழுத்த தழும்புகள் திருமேனியில் உள்ளன.

பல்லவர்கள் காலத்து கோயிலாகும் , சிதலம் அடைந்ததால் பிற்கால சோழர்கள் புதுப்பித்துளார்கள். சங்கமகுல விரூபாட்சராயன் இதற்குக் கோபுரம் கட்ட முயன்றபோது, புருஷோத்தம கஜபதி என்பவனின் திடீர் படையெடுப்பால் அப்பணி நின்று கோயிற்று.வீர ராசேந்திர சோழன் என்பவன் சாளுக்கியருடன் போரிட்டு, வென்று, திரும்பும் வழியில் இக்கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கியதாகக் கல்வெட்டொன்றால் அறிகிறோம்.’சயங்கொண்ட சோழமண்டலத்துக் குன்றவர்த்தனக் கோட்டத்து நின்றையூர் நாட்டு நடுவின் மலை திருக்காரிக்கரைப் பிள்ளையார்’ என்று கல்வெட்டால் தெரியவருகிறது.

இக்கோயிலில் கால பைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருளுகிறார் . எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து வேண்டிக்கொள்கின்றனர் .பிராத்தனை நிறைவேறியவுடன் குழந்தையை இங்கு கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்துவிட்டு பிறகு பைரவரின் வாகனமாக நாய் உருவத்தை விலையாக கொடுத்து திரும்பவும் குழந்தையை பெற்று செல்கிறார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-valeeswarar-and-kala-bhairavar.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 8 – 11 .45  மணி வரை மாலை 3 – 5 .45 மணி வரை

செல்லும் வழி :

சென்னையில் இருந்து சுமார் 85 km தொலைவில் உள்ளது . நாகலாபுரத்தில் இருந்து 5 km தொலைவில் உள்ளது .

அருகில் உள்ள கோயில்கள் :

1 . பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் – சுருட்டப்பள்ளி

2 . வேத நாராயண பெருமாள் கோயில் – நாகலாபுரம்

3 . கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் – நாராயணவனம்.  

Location :

Leave a Reply