ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் கோயில் – சென்னை
இறைவன் : பாராதவாஜேஸ்வரர், வாலீஸ்வரர்
இறைவி : சொர்ணாம்பிகை
தல விருச்சம் : நாகலிங்க மரம்
ஊர் : கோடம்பாக்கம் , சென்னை
மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு
இவ்தல இறைவன் வாலி அரசன் பூஜை செய்த தலங்களில் ஒன்று ஆதலால்தான் திருவாலீஸ்வரர் என மற்றொரு பெயரால் அழைக்கப்படுகிறார் .பாரத்வாஜ முனிவரால் பூஜிக்கபட்ட இறைவன் என்பதால் ஸ்ரீ பாரத்வாஜேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார் .ஸ்ரீபாரத்வாஜா கோத்ரகாரர்கள் வணங்கும் கோயிலாகும் .வாலி மற்றும் பாரத்வாஜ திருஉருவ சிலைகள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது .
சோழ மன்னன் மற்றும் பல்லவ மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள்.தொண்டைநாட்டு 24 கோட்டங்களில் 2 வது கோட்டமான புலியூர் கோட்டத்தை சேர்ந்த கோயிலாகும் .
இறைவன் பரத்வாஜர் மற்றும் அன்னை சொர்ணாம்பிகை இருவரையும் தரிசனம் செய்துவிட்டு கோயிலின் சுற்று பிரகாரங்களை நாம் சுற்றும்போது நம் கண்களை கவரும் வண்ணம் கோயிலின் பல இடங்களில் அழகிய வண்ண சுதை சிற்பங்களை நிறுவியுளார்கள்.கோயில் இறைவன் மற்றும் இறைவனின் கருவறை ஒரு தேர் அமைப்பில் அமைத்துள்ளார்கள் .
இக்கோயில் கல்வெட்டுகளில் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ விஜய கண்ட சோழர்களால் கட்டப்பட்டது என்று கூறுகிறது .
குலந்திகள் வேண்டி இத்தலத்தில் வந்த குஜராத்தை சேர்ந்த சிற்றரசர் ஒருவர் இத்தல இறைவன் மற்றும் மற்றும் இறைவியை வேண்டிக்கொண்டு குழந்தை பாக்கியம் பெற்றார் .அவரே இக்கோயிலில் உள்ள இரண்டு குளங்களை வெட்டினார் மற்றும் நிலங்களை தானமாக வழங்கினார் .
சப்த கன்னிமார்கள் ,கோசாலை மற்றும் நவ துவாரங்கள் ,ரம்பை ,ஊர்வசி ,மேனகை ,உஷா ஆகிய தேவ நடனமங்கைகள் அனைவருக்கும் அழகிய சிலை வைத்துள்ளார் .
please watch full video about this temple
செல்லும் வழி
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் சிக்னல் தாண்டி பவர் ஹவுஸ் சிக்னல் இருந்து இடதுபுறம் சுமார் 1 km தொலைவில் இவ் கோயில் அமைந்துள்ளது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-valeeswarar-bharadvajeshwarar.html