ஸ்ரீ வல்லிசேரபாலீஸ்வரர் கோயில் – ஆலப்பாக்கம் (சென்னை )

இறைவன் : வல்லிசேரபாலீஸ்வரர்
அம்பாள் : வல்லிசேரபாலீஸ்வரி
ஊர் : ஆலப்பாக்கம்,சென்னை

சென்னையில் அழிந்துபோன கோயில்களின் லிங்கங்களை மீட்டெடுத்து புதிய கோயில்களை உருவாக்கி பக்தர்களை பரவசப்படுத்தும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்று .
ராஜா கோபுரம் இல்லை, பலிபீடத்திற்கு முன் பழைய கருங்கல் கம்பம் உள்ளது,அதில் ஹனுமான் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது .

நந்திதேவரை கடந்தவுடன் சிறிய மண்டபத்தை கடந்தால் கருவறையில் சிவபெருமான் சற்று பெரிய லிங்கமேனியில் நமக்கு அருள்தருகிறார் , நான் சித்திராபௌர்ணமி அன்று சென்றபோது குருக்கள் இரண்டு ஸ்படிக லிங்கங்களுக்கு அபிசேகம் செய்துகொண்டிருந்தார் . சுவாமி கிழக்கு திசையை நோக்கி அருள்தருகிறார் .

தெற்கு திசையை நோக்கி தாயார் சுந்தரமாக காட்சி தருகிறார் , விநாயகர் ,முருகர் ,துர்க்கை அம்பாள் ஆகியோர் கோஷ்டத்தில் உள்ளனர் .
செல்லும் வழி:
போரூர் முன்பாக லட்சுமி நகர் முன் நாயுடு ஹால் பின்புறம் இக்கோயில் அமைந்துள்ளது .
தொடர்புக்கு : விஸ்வநாத குருக்கள் – 9884111917
Location :
திருச்சிற்றம்பலம்