ஸ்ரீ வரதராஜர் பெருமாள் கோயில் மற்றும் திருக்கச்சி நம்பிகள் கோயில் -பூந்தமல்லி
இறைவன் : வரதராஜர் பெருமாள்
அம்பாள் – புஷ்பவல்லி தாயார்
மற்ற சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர் , ஸ்ரீனிவாச பெருமாள் , திருக்கச்சி நம்பிகள் ,ஆண்டாள்
பழமை : 14 ஆம் நூற்றாண்டு மற்றும் 17 நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது
- விஜய நகர காலத்தை சேர்ந்தது , மற்றும் இக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்ப நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்டது .
- திருக்கச்சி நம்பிகள் பிறந்த தலம் இது , மற்றும் அவர் தினமும் காஞ்சிபுரம் வரதராஜரை வணங்கும் பொருட்டு இக்கோயிலை நிர்மாணித்தார் .
- இக்கோயிலுக்குள் மூன்று பெருமாள்களான ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் , காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் மற்றும் திருப்பதி ஸ்ரீனிவாசர் ஆகியோரை ஒரே இடத்தில தனி தனி சன்னதியில் தரிசிக்கலாம் .
- ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதம் 21 தேதியிலிருந்து 25 வரை சூரிய ஒளி மூலவர் வரதராஜர் மேல் படும் .
- திருக்கச்சி நம்பிகள் பிறந்த நட்சத்திரம் ஆன மாசி மிருகசீஷம் நட்சத்திரம் அன்று அதாவது பிப்ரவரி மாதம் மிருகசீஷம் நட்சத்திரம் ஒட்டி 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது .
- இக்கோயிலின் தாயார் மஹாலக்ஷ்மி பூவில் அவதரித்தார் ஆதலால் பூவில் இருந்தவள் என்பதால் பூவிருந்தவல்லி என்ற பெயர் பெற்றது .
திருக்கச்சி நம்பிகள் வரலாறு :
சென்னை அருகில் உள்ள பூந்தமல்லி என்ற இந்தத்தலத்தில் 1009 ம் ஆண்டு பிறந்தார் . இவருடைய பெயர் கஜேந்திர தாசர் , செல்வம் மிகுந்த குடும்பத்தில் நான்காவதாக பிறந்தார் , இவருக்கு கிடைத்த சொத்தில் நாட்டம் இல்லாமல் பெருமாளுக்கு கைங்கரியம் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது ,ஒருநாள் காஞ்சி வரதர் அவர் கனவில் தோன்றி “ நீ நந்தவனம் அமைத்து அதில் பூக்கும் பூவை கோர்த்து நாளும் எனக்கு அணிவிப்பாயாக ” என்று கூறி மறைந்தார் . அதென்படி நம்பிகள் தனக்கு சொந்தமான பூந்தமல்லி இடத்தில் நந்தவனம் அமைத்து காஞ்சி வரை நடந்து சென்று பூமாலை சாற்றினார் . பின்னர் சிறிது காலம் கழித்து அங்கேயே தங்கியிருந்து ஆலவட்டம் என்னும் விசிறி சேவையை செய்து வந்தார் ,இவ்வாறு செய்தவாறே இறைவனிடம் நேரடியாக பேச தொடங்கிவிட்டார், இதைக்கண்ட ஒரு பக்தர் நம்பிகளின் கால் தூசுவை வணங்கும் சிஸ்யராக மாறினார் . அவர் ஒரு நாள் நம்பிகளிடம் தனக்கு மோட்சம் கிட்டுமா என்று கேட்டார் அதர்க்கு அவர் உனக்கு மோட்சம் கிட்டும் என்று கூறினார் .
திருக்கச்சி அவர்கள் இறைவனிடம் தனக்கு மோட்சம் கிட்டுமா என்று கேட்டார் அதர்க்கு இறைவன் அது எப்படி கிட்டும் குருவுக்கு தூய மனதுடன் தொண்டு செய்தால் தான் கிட்டும் என்று கூறினார் , திருக்கச்சி அவர்கள் தனக்கு குரு வேண்டும் என்று எண்ணி திருச்சி ரெங்கநாதர் கோயிலுக்கு சென்று திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடு மேய்ப்பவனாக சேர்ந்துவிட்டார் .
ரெங்கநாதருக்கு ஆலவட்டம் செய்துவந்தார். ரெங்கநாதர் அவரிடம் எனக்கு காவேரி ஆற்றின் காற்று நன்றாக வருவதால் எனக்கு வீச வேண்டாம் நீ போய் திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு போய் வீசு என்றார் , அவர் அங்கிருந்து கிளம்பி திருப்பதி சென்று அவருக்கு ஆலவட்டம் செய்து வந்தார் . ஸ்ரீநிவாஸர் அவரிடம் எனக்கு இந்த மலையிலிருந்து நன்றாக காற்று வருவதால் நீ காஞ்சிக்கு சென்று வரதராஜருக்கு ஆலவட்டம் வீசு என்று கூறினார் . அவர் காஞ்சிக்கு வந்து அவருக்கு புஷ்பகைங்கரியம் செய்து வந்தார் ,அவருடைய வைராக்கியத்தை கண்ட வரதர் அவருக்கு காட்சி கொடுத்து அவரை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொண்டார் . வயதான காலத்தில் காஞ்சிபுரம் நடந்து சென்று கைங்கரியம் செய்யமுடியாமல் போகவே இக்கோயிலை அவர் நிர்மாணித்தார் .
செல்லும் வழி
பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இத்தலம் அமைந்துள்ளது .
அருகில் வைத்தியநாத திருக்கோயில் (செவ்வாய் தலம் ) உள்ளது .
Location: