Sri Vedanarayana Swamy Temple – Nagalapuram

ஸ்ரீ வேத நாராயணஸ்வாமி கோயில் – நாகலாபுரம்

Sri Vedanarayana Swamy Temple - Nagalapuram

இறைவன் : வேதநாராயண பெருமாள்

தாயார் : வேதவல்லி தாயார்

ஊர் : நாகலாபுரம்

மாவட்டம் : சித்தூர் ,ஆந்திரா

பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இத்தலத்தில் இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலமாகும் .அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இருக்கிறார் .இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற மஹா விஷ்ணு எடுத்த அவதாரமாகும் .

ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது ,அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளி வந்து விழுந்தன .அவற்றை அசுரரான சோமகுரு என்ற அசுரன் அதை திருடி எடுத்து சென்றுவிட்டான் .இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும் அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார் .

மத்திய புராணத்தில் இந்த அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள்.விஷ்ணுவின் பக்தரான சத்தியவரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அவ் கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றி படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார் . பகவான் தன் அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார் . அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் .பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார் .

video

இந்த கோயிலானது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது ஆகும் . இவ் ஊரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகமா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார் .

இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம் . இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது .சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6 .15  மணி வரை இறைவனின் மீது படும் .அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும் ,இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும் ,மூன்றாம் நாள் இறைவனின் தலை பகுதியில் படும் .

இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-vedanarayana-swamy-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00 ,மாலை 4 .00 -8 .00

செல்லும் வழி:

இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது .சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்  உள்ளது . சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 km தொலைவில் இக்கோயில் உள்ளது .

Location

ஓம் நமோ நாராயணாய நம!

Leave a Reply