ஸ்ரீ வேலாயுத சுவாமி கோயில் – திண்டல் ,ஈரோடு
‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று கூறுவார்கள். அதுபோல் தொண்டைமண்டலத்தில் உள்ள மலைகள் மற்றும் குன்றுகள் இருக்கும் இடத்தில் எல்லாம் அழகன் குமரன் பக்கதர்களுக்கு அருளை அள்ளி தந்துகொண்டிருக்கிறார் . அந்த வகையில் ஈரோட்டில் அமைந்துள்ள திண்டல் மலையின் மீது அமர்ந்திருக்கும் வேலாயுத சுவாமி கோயிலை பற்றித்தான் நான் எழுதுகிறேன் .
ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 8 km தொலைவில் திண்டல் மலை உள்ளது . மலையில் 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்த பகுதியின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது .மரங்கள் நிறைந்த பகுதியின் நடுவே இவ் கோயில் அமைந்துள்ளது . இக்கோயில் அருணகிரிநாதரால் பாட பெற்ற ௧௭௮ தளங்களில் ,திண்டல் மலை வேலாயுதசுவாமி கோயிலும் ஒன்று .
திண்டல் மலை மீது தீபஸ் தம்பம் அமைக்கப்பட்டுள்ளது ,தீபா திருநாள் அன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு செய்கிறார்கள் . இறைவன் குழந்தை வேலாயுதசாமி , மூலவர் வேலாயுதசாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள் .
இக்கோயிலில் உள்ள இடும்பன் , இவ் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய முருகப்பெருமானிடம் வேண்டியதாகவும் , இறைவன் அதை கேட்டு மழை பொழிந்ததாகவும் இக்கோயில் வரலாறு கூறுகிறது . ஆதலால் இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுதலை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெரும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது .
இக்கோயிலில் இரண்டு எலுமிச்சம் பழங்களை வைத்து பூஜிக்கும் பக்தர்கள் ,அதில் ஒன்றை வீட்டுக்கு எடுத்து செல்கிறார்கள் , அதை நறுக்கி வீட்டின் நான்கு பக்கங்களிலும் வீசினால் எதிரிகளால் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை இன்றும் இப்பகுதியில் உள்ளது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-velayuthasamy-temple-thindal-erode.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 – 12 .30 , மாலை 4 – 8 .30 வரை
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில்
காலை 6 -1 , மாலை 4 -9 வரை
Location: