Sri Velvavaneswarar Temple- Nallur ( Vridhachalam)

ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில் – நல்லூர் (விருத்தாசலம் )

Sri vilvavaneswarar Temple- Nallur
Full View

இறைவன்– வில்வனேஸ்வரர்

இறைவி– பிரகன்னாயகி, பாலாம்பிகை

பழமை : 1000 வருடங்கள் முற்பட்டது

ஊர் : நல்லூர் , விருத்தாசலம் அருகில்

மாவட்டம் : கடலூர் மாவட்டம்

  • எனது 50 பதிவில் நான் பெருமையுடன் பதிவிடுவது எனது பிறந்து வளர்ந்த இடமான எனது சொந்த ஊரான நல்லூர் என்ற ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோயில். எனக்கு முதன் முதலில் ஆவுடையரின் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்த இடம் .
  • இக்கோயிலுக்கு தனி சிறப்பு தருவது மூன்று நதிகள் கூடும் இடத்தில் நடுநாயகமாக உயர்ந்த இடத்தில் கம்பிரமாக இக்கோயில் அமைந்துள்ளது என்பதே,இந்தத் திருத்தலத்தையொட்டி ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு , கோமுகி நதியும் கிழக்கு நோக்கி பாய்கின்றன . ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தலம் நல்லூர்.
  • இங்குள்ள மகாமண்டபத்தில் சோழர்கால தூண்களை கொண்டுள்ளது ,தூண்களில் வடக்குபுறம் ஒரு தூணில் கல் வெட்டு காணப்படுகிறது.

“ஸ ஸ் ஸ்ரீ தனித்த
யாண்ட பஞ்சசதி
தகன அறுபடை
யான சுந்தரபட்ட
நான தில்லைநாயக
வேளான்

என்று வெட்டப்பட்டுள்ளது , சுந்தர பட்டனான தில்லை நாயக வேளான் கட்டி வைத்த மண்டபக இருக்ககூடும் , தூண்களும் மண்டப அமைப்பும், கட்டடக் கலைத்திறனும் ஒப்பு நோக்கும் போது இவை சோழர் காலத்திய கலை முறை என்பதை உணர முடிகிறது. மேலும் இம்மண்டபம் மூன்று பக்கங்களிலும் திறந்த நிலையிலும் ,விதானத்தில் மீனின் பெரிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது .

  • கல்வெட்டுக்களை ஒப்புநோக்கும் போது இங்கு சோழர்களும், பாண்டியர்களும்,விசயநகர மன்னர்களும் இப்பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் அரசாண்டாமை புலனாகின்றது.இவற்றில் இக்கோயில் மூலத்தானம் முதல் மகா மண்டபம் வரையில் சோழர்கால கலைப்பணியாக திகழ்கின்றது.
  • குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வீற்றியிருக்கும் பாலாம்பிகையை வேண்டிக்கொள்கின்றனர்.
  • இக்கோயிலில் நடைபெறும் மாசி திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் . அதிலும் ஆறாம் நாள் திருவிழா பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் இறைவன் ஊர்வலம் வரும் அழகை காண கோடி கண்கள் வேண்டும் .
  • இந்த கோவிலில் மாசி மகம் ஆறாம் நாள் திருவிழா ரொம்ப விசேஷமானது .திருவட்டத்துறையில் 5 ஆம் நாள் திருவிழாவும் ,ஆறாம் நாள் திருவிழாவின் காலை விருதாச்சலத்திலும் இரவு இங்கேயும் வரிசையாக காண்பவர்கள் காசிக்கு போய் கிட்டும் புன்னியம் கிட்டுவதாக ஐதீகம் .அதுபோல் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாழ்ந்தது
  • கடக ராசிக்காரர்கள் பரிகார தலமாகும் .
  • சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இக்கோயிலின் உள் மண்டபத்தில் அழகிய சோழர்கால வண்ண சித்திரங்கள் மேல் சுவற்றில் தீற்றியிருந்தார்கள் அவைகளை பார்த்து நான் வியந்து போனதுண்டு ஆனால் அவைகள் இப்போது இல்லை என்பது எனக்குள் சிறிய வருத்தம் இப்போதும் உண்டு.
  • பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இவூரில் சிறிது காலம் தங்கியிருந்ததாக கூறுகிறார்கள் . அதர்க்கு ஏற்றாற்போல் இக்கோயிலில் பஞ்சபாண்டவ்ர்கள் பூஜித்த லிங்கங்கள் உள்ளன , மற்றும் பீமன் மணலால் சிவலிங்கத்தை செய்து பூஜித்து அவர் வராததால் கோபத்தில் தன் கதையால் சிவனின் தலையில் அடித்தார் உடனே இறைவன் காட்சி தந்தார் என்று கூறுகிறார்கள் . இவ் மண்ணால் ஆனா பிளவு பட்ட லிங்கம் இறைவனின் கருவறை முன் மண்டபத்தில் வலது ஓரத்தில் இன்றும் உள்ளது , மற்றும் ஆற்றை கடந்தால் அங்கு பஞ்சபாண்டவ்ர்கள் தங்கி பூஜித்த சிறு சிறு கோயில்கள் உள்ளது .
  • இக்கோயில் கடக ராசி உள்ளவர்கள் பார்த்து அருள் பெறவேண்டிய தளம் .ஒரு காலத்தில் வில்வமரங்கள் உள்ள காடுகளுக்கு நடுவே எம்பெருமான் உள்ளதால் இவருக்கு வில்வனேஸ்வர் என்ற பெயர் கிட்டியது .இன்றும் ஊருக்கு வெளியே சுற்றிலும் ஆறுகளால் சூழப்பட்டு நிறைய மரங்களுக்கு இடையே ரம்யமாக அமைதியாக காட்சி அளிப்பார் .
Sri vilvavaneswarar Temple- Nallur
Murugan

வடக்கு திசை நோக்கிய முருகன் :
இங்கு முருகனும் வடக்கு நோக்கிய சன்னதியில் பெரிய திருஉருவமாக உள்ளார். இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. முருகன் அசுரர்களை அழித்தபோது வீரகத்தி தோஷம் பீடித்தது, அதனை போக்க முருகன் இந்த முக்கூடலில் வந்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக ஐதீகம்.

Sri vilvavaneswarar Temple- Nallur
Silver Rishabam

அமைவிடம் மற்றும் அருகில் உள்ள கோயில்கள்

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூர் என்ற ஊரில் இறங்கி விருத்தாசலம் பேருந்து ஏறி கண்டபங்குறிச்சி என்ற இடத்தில் இறங்கி 4 km சென்றால் இவ்வூரை அடையலாம். அல்லது விருத்தாசலம் சென்று பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண் 7 ,22 மற்றும் ஆனந்தன் பேருந்துகள் நேரிடையாக செல்கின்றன . இங்கிருந்து 18 km தொலைவில் உள்ளது .

கோயில் குருக்கள் திரு . சாம்பசிவ சிவாச்சாரியார்
தொலைபேசி : 9443616639

அருகில் உள்ள கோயில்கள்

1 . பழமலை நாதர் கோயில் – விருத்தாசலம்

2 . பூவராக ஸ்வாமி , ஸ்ரீமுஷ்ணம்

3 . சுவேதரண்யேஸ்வரர் – ராஜேந்திரப்பட்டினம்

4 Comments

Leave a Reply