Sri Velveeswarar Temple- Valasaravakkam

ஸ்ரீ வேள்வீஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் – வளசரவாக்கம்

Sri Velveeswarar Temple- valasaravakkam
Main Entrance

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!

Sri velveeswarar Temple- valasaravakkam

இறைவன் : வேள்வீஸ்வரர் ,அகதீஸ்வரர், பானுபுரிஸ்வரர்

அம்பாள் : திரிபுரசுந்தரி

  • சோழர்களால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது . குலதுங்க சோழன் காலத்து கோயில் என்று கூறுகிறார்கள் .
  • சென்னையில் உள்ள முக்கியமான பழமையான சிவன் கோயில்களில் ஒன்று .
  • ராஜா கோபுரம் மற்றும் கொடி கம்பம் இல்லை ,ஆனால் மிக பெரிய இடவசதிகளும் மற்றும் எல்லா விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறுகிறது .
  • கோயிலின் முதன்மையானவர் வேள்வீஸ்வரர் அவர் அருகில் அகத்தியர் பிரதிஷ்டை செய்த அகதீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது . வேள்வீஸ்வரனுக்கு பின்புறம் பானுபுரிஸ்வரருக்கு சின்னதாக சன்னதி உள்ளது . அவருக்கு முன்பாக பக்தர்கள் தீபம் ஏற்றி தியானம் செய்கிறார்கள்.
  • கோயிலின் உள்ளே கோதண்ட ராமருக்கு தனி சன்னதி உள்ளது. மற்றும் ஆஞ்சனேயருக்கு சன்னதி உள்ளது .

அமைவிடம் :
விருகம்பாக்கத்திலிருந்து போரூர் செல்லும் வழியில் வளசரவாக்கம் சிக்னல் முன்னர் சாலையின் ஓரத்திலேயே இக்கோயிலை காணலாம் .

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply