Sri Vengeeswarar Temple -Vadapalani

ஸ்ரீ வேங்கீஸ்வரர் கோயில் – வடபழனி

Sri Vengeeswarar Temple- Vadapalani
Main Gopuram

காதற்ற ஊசியும் வாராது
காணும் கடை வழிக்கே
-பட்டினத்தார்


இறைவன் : வேங்கீஸ்வரர்
அம்பாள் : சாந்தநாயகி
ஊர் : வடபழனி ,சென்னை

  • சென்னையில் உள்ள மிக முக்கியமான மற்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் கோயில்களில் இக்கோயிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது
  • பண்டைய காலங்களில் தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு என்று வழங்கப்பட்டது . அதில் 24 கோட்டங்கள் இருந்தன அதில் ஒன்று கோடம்பாக்கம் என்று நாம் இப்போது அழைக்கும் புலியூர் கோட்டம் ஒன்றாகும் .
  • சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக, மேருமலையை வில்லாக்கி வளைத்த இடமே கோடம்பாக்கம்
    (கோடு+அம்பு =கோடம்பாக்கம் ) என்றும் ஆதிசேஷன் வழிவந்த கார்கோடகன் என்ற நாக அரசன் திருமாலை வழிபட்ட இடம் என்றும் கூறுகிறார்கள் .
  • சோழர்களின் கலைநயதோடு உருவாக்கப்பட்ட கோயில் . இறைவன் இருக்கும் கருவறை கோபுரம் கஜபிருஷ்டம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது .
  • கொடி கம்பம் மற்றும் நந்தி பீடத்தை விட கோயில் கருவறை நுழைவு பகுதி சற்று கீழாக உள்ளது. அம்பாள் சன்னதி கொடி கம்பத்தின் அருகிலேயே தனி சன்னதியில் உள்ளார் .
  • இறைவனின் எதிரே அவரை வணங்கியபடி புலிக்கால் முனிவர்(வியாக்ரபாதர் ) மற்றும் பதிஞ்சலி முனிவரின் சிலைகள் உள்ளன .
  • இக்கோயிலின் சிவன் அடிகளர்களால் மிக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது மற்றும் எல்லா விசேஷேங்களும் மிக அழகாக செய்கிறார்கள் .

அமைவிடம்
வடபழனி சிக்னல் அருகில் உள்ளது மற்றும் முருகன் கோயில் சாலை நுழைவு வாயிலின் முன் உள்ள தெரு வழியாகவும் செல்லலாம் .

phots:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-vengeeswarar-temple-vadapalani.html

Location:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply