Sri Venkatarama Temple – Gingee

ஸ்ரீ வேங்கடரமணர் கோயில்  – செஞ்சி

நாம் எவ்வளவோ இடங்களை பார்த்திருப்போம் எவ்வளவோ கோயில்களுக்கு சென்றிருப்போம் ஆனால் பல போர்களை கண்ட , கோட்டைகளை கொண்ட இந்த செஞ்சி ஊரில் அமைந்துள்ள பல வரலாற்று சின்னங்கள் இன்னும் நம் வரலாற்றை திரும்பிபார்க்க செய்கிறது .

இந்த ஊரில் இரண்டு கோட்டைகள் மற்றும் பழைய கோயில்கள் இன்றும் நம் கண்முன்னே பழைய வரலாற்றை எடுத்துக்காட்டுகிறது .

ராஜ கோட்டை அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . கோயில் சற்று தாழ்வான பகுதியில் உள்ளது . கோயிலுக்கு முன் மிக அழகாக புல்தரை அமைத்துள்ளார்கள்.

ஏழு நிலை ராஜகோபுரம் நிறைய சுதை சிற்பங்களை தாங்கி நிற்கிறது . ஆனால் அதன் மூக்கு மற்றும் கைகள் படையெடுப்பினால் சிதைத்து போய் உள்ளது . ராஜகோபுரத்தின் வெளிபிரகாரத்தின் இருபுறமும் மண்டபம் உள்ளது அதில் ஒன்று தற்போது சிதைந்து காணப்படுகிறது .

ராஜகோபுரத்தை கடந்து உள்ளே செல்லுகையில் ராஜகோபுரத்தில் கதவு அருகே ராமாயண காட்சிகள் ,ராமர் பட்டாபிஷேக காட்சிகள் , பாற்கடலில் அமிர்தம் கடையும் காட்சிகள் , கோபியரோடு கிருஷ்ணர் உள்ள காட்சிகள் மற்றும் சிவன் சிற்பங்கள் ஆகியவை சுதை சிற்பங்களாக வடித்துள்ளார்கள்.

கோயிலின் உள்ளே கல்யாண மண்டபம் ,ஆயிரம் கால் மண்டபம் ,உற்சவர் மணடபம் ஆகியவைகள் உள்ளன . கல்யாண மண்டபத்தில் உள்ள தூண்கள் ஒற்றை கல்லால் ஆனது . இவைகளை நாம் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் பத்தாது . இங்குள்ள தூண்களை எடுத்து சென்றுதான் பாண்டிச்சேரியில் உள்ள காந்தி மண்டபத்தில் சுற்றி உள்ள 8 தூண்களை அமைத்தார்கள் என்று கூறுகிறார்கள் .

இக்கோயிலானது 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால் கட்டப்பட்டது ஆகும் . முத்தையாலு நாயக்கர் என்பவரால் கி பி  1540 – கி பி 1550  ஆண்டு காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது . இக்கோயிலானது மூன்று போர்களை கண்டுள்ளது . ஆற்காடு நவாபுக்கும் ,ராஜ தேசிங்குக்கும் இடையே போர் ஏற்பட்டது பின்பு இந்து முஸ்லீம் போர் இறுதியாக ஆங்கிலேயர்கள் இக்கோயிலை வெடி வைத்து தகர்த்தார்கள் என்று சொல்லுகிறார்கள் . இங்குள்ள கோயில் தூண்கள் மற்றும் பொன் பொருள்களை  எல்லாம் எடுத்து சென்றுவிட்டதாகவும் சொல்லுகிறார்கள் .

இதற்கு முன் இக்கோயில் கருவறையில்  பெருமாள் இல்லாமல் இருந்தது கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே  புதியதாக பெருமாளை பிரிதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள் .

ஒவ்வொருவரும் தன குழந்தைகளை அழைத்து சென்று நம் வரலாற்றை சொல்லி காண்பிக்க வேண்டிய ஒரு இடம் தான் இந்த செஞ்சி மற்றும் இங்குள்ள கோயில்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2022/06/sri-venkatramana-temple-gingee.html

செல்லும் வழி :

சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் செஞ்சி உள்ளது . ஊரை தாண்டி திருவண்ணாமலை செல்லும் பாதையில் சென்றால் இடது புறம் ராஜ கோட்டை செல்லும் வழி வரும் அந்த வழியே உள்ளே சென்றால் ராஜ கோட்டை நுழைவு வாயில் வரும் அதை கடந்து இடது புறம் திரும்பி மறுபடியும் வலது புறம் திரும்பினால் இக்கோயிலை அடையலாம் .

Venkatramana temple situated in Gingee. One of the ancient temple dedicated to God Vishnu. Ancient temple built by Muthialu nayakar (1540-1550 AD). Parts of the temple were dismantled by different personages.

Location :

திருச்சிற்றம்பலம்

Leave a Reply