Sri Vigneswara swamy Temple- Ainavilli

ஸ்ரீ சித்தி விநாயகர் (விக்னேஸ்வரா) கோயில் -ஐநாவில்லி

Sri Vigneswara Temple-Ainavilli
Moolavar
  • இயற்கையின் பிறப்பிடம் போல் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று மரங்கள் ,மறுபுறம் கோதாவரி ஆற்றின் கால்வாயில் திரண்டு ஓடும் தண்ணீர் ,இந்த இயற்கையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .எனக்கு இவ் கோதாவரி ஆற்றின் அருகில் உள்ள கோயில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது ,பல பழையகால மற்றும் புராணத்தோடு தொடர்புடைய கோயில்களை கண்டு நான் மிகவும் வியப்புற்றேன் அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி . நான் கண்டு களித்த 18 கோயில்களில் முதலில் இந்த பழமையான மற்றும் சக்தி வாய்ந்த சித்தி விநாயகர் கோயிலை பற்றி இவ் பதிவில் காணலாம் .
Sri Vigneswara Temple-Ainavilli
  • எல்லா தடைகளிலிருந்தும் மற்றும் நினைத்தவைகள் நிறைவேற ஒரு தேங்காயின் மூலம் நிறைவேற வேண்டும் என்றால் இக்கோயிலுக்கு வாருங்கள் . இங்குள்ள விநாயகர் சுயம்பு விநாயகர் ஆவார் ,இவர் ஒரே கல்லால் ஆனவர் .
  • தன் தந்தத்தை இடதுபுறத்தில் திரும்பி இருக்குமாறு வைத்துள்ளார் மற்றும் தன் இடது கையில் லட்டு வைத்துள்ளார் ,வலது கையை அபய முத்திரையாக வைத்து கிழக்கு நோக்கி அருள்தருகிறார் .
  • வாஸ்து சாஸ்திரத்திற்கு பெயர் போன “க்ஷேத்ர பூர்ணா” நூலை எழுதிய யஃனா மற்றும் தக்க்ஷ பிரஜாபதி ஆகியோர் இக்கோயிலில் விநாயகரை தரிசித்த பின்னரே இந்த நூலை எழுதி முடித்தனர் .
Sri Vigneswara Temple-Ainavilli
  • இக்கோயின் மற்றொரு வரலாறு கூறுவது யாதெனில் வ்யாஸ மகரிஷி தென் பகுதியை நோக்கி வரும் வழியில் இவ் கோதாவரி படுக்கையின் இந்த ஊரில் சித்தி விநாயகரை பிரதிஷ்டை செய்தார் . கேட்பவர்களுக்கு வேண்டிய வரத்தை தருமாறு கேட்டுக்கொண்டார் .
  • இரண்டு கோபுரங்கள் உள்ளன . கிழக்கு கோபுரத்தின் வழியாக சென்றால் விநாயகரை வழிபடலாம் ,மற்றுமொரு கோபுரத்தின் உள் சென்றால் பூதேவி மற்றும் ஸ்ரீதேவி சமேத கேசவ பெருமாள் மற்றும் விசுவேஸ்வர ஸ்வாமியையும் தரிசிக்கலாம்
Sri Vigneswara Temple-Ainavilli
  • இக்கோயிலை விஜயநகரம் ,பிதாபுரம் அண்ட் பீட்டாபுரம் ஆகியவற்றை சேர்ந்த மன்னர்கள் கட்டி நிலங்கள் மற்றும் பொன்,பொருள்களை கொடுத்து நிர்வகித்து வந்தார்கள் ,இப்போது இக்கோயிலை ஆந்திரா அரசு நிரவகிக்கிறது.
Sri Vigneswara Temple-Ainavilli

கோயில் அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம் :
இக்கோயில் ராஜமுந்திரியில் இருந்து சுமார் 60 km தொலைவில் உள்ளது.

காலை 5 .00 – 01 .00 வரை ,மாலை 3 .30 -8 .00 வரை

தொலைபேசி எண்: 8856225812 ,9490225812

History : The Lord of god,who removes all obstacles and fulfills the desires of his devotees,pleased by the offering of a single coconut.come worship here !

among all the Suyambu Ganesha who manifested in the village of ayinavilli on the bank of the sacred Vriddhagautami river in east Gothavari district.The purnas mention that sage veda Vyasa visited this temple,and worshiped the lord here. even daksha Prajapatti also served this lord.

Route: 1. Rajamundry-Ravulapalam-Bodipalam bridge-vaanapalli-Airavilli-60Km.

2. Kakinada-Yanam-Amalapuram-Mukteswaram-Ainavilli-65 Km

3. Kakinada-Drakshavamam-Kotipalli-Mukkteswaram-Airavilli-45Km

4. Kakinda-Yanam-Mummidivaram-Mukteswaram-Ainavilli-45 km

Contact Number: 8856225812,9490225812

Location :

I visited this place 30.06.19

Leave a Reply