Sri Yoga Anjaneyar Temple -Sholinghur

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோயில்  -சோளிங்கர்

Yoga Anjaneyar Temple

சோளிங்கர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது இந்த வையகத்தில் மனிதர்களையெல்லாம் வாழவைக்கும் யோக நரசிம்மர் தான் நமக்கு நினைவுக்கு வருவார் . சுமார் 1305 படிக்கட்டுகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் உள்ளார் . அந்த மலைக்கு அருகிலேயே சுமார் 406 படிக்கட்டுகள் கொண்ட சின்ன மலை என்று அழைக்கப்படும் மலையில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

நுழைவு வாயிலின் முன்பு உள்ள படிக்கட்டில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வணங்கிவிட்டு மலையை ஏற துவங்குகிறார்கள் . 406 படிக்கட்டுகள் கடந்து நாம் மேல் வந்தால் இறைவனின் கோயிலை அடையலாம் . ராஜகோபுரம் திருப்பணி வேலை நடைபெறுவதால் மற்றொரு பாதை மூலம் நாம் கோயிலின் வளாகத்தினுள் செல்கிறோம் . மேற்கு நேக்கி அமைந்துள்ள இக்கோவிலில் மேற்கு நோக்கி ஸ்ரீயோக ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ளார். ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீயோக நரசிம்மரை பார்த்த வண்ணம் யோக நிலையிலுள்ளார்.

உள்ளே நுழைந்தவுடன் மிக பெரிய வெளிபிரகாரத்தை நாம் காணலாம் . பிரகாரத்தின் நடுவே அழகான குளம் உள்ளது . இக்குளத்திற்கு அனுமன் தீர்த்தம் என்று பெயர் .

அனுமன் தீர்த்தம் மகிமை

இந்த அனுமன் தீர்த்தமானது மிகவும் புனிதமானது . இந்த தீர்த்தத்தில் தான் அனுமனுக்கு திருமஞ்சனம் நடக்கிறது . மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் , குடும்ப பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த குளத்தில் குளித்து , படியில் படுத்து ஹனுமனை நினைத்து தியானித்து பின்பு அவரை தரிசித்தால் அவர் அவர்களின் கனவில் வந்து விருப்பத்தை நிறைவேற்றி அவர்களை  மனநலம் பாதிப்பிலிருந்தும், குடும்ப பிரச்னையிலிருந்தும் விடுபட செய்கிறார்   . இன்றும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நிவர்த்தி செய்துகொள்கிறார்கள் .

நாம் இப்போது ஹனுமான் சன்னதியை நோக்கி செல்வோம் . அனுமன் சந்நதியானது சிறிது உயரமான இடத்தில் உள்ளது . ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீயோக நரசிம்மரை பார்த்த வண்ணம் யோக நிலையிலுள்ளார்.நான்கு திருகரங்களுடன் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரின் மேல் இரு திருகரங்களையும் பகவான் ஸ்ரீயோக நரசிம்மரால் கொடுக்கப்பட்ட சங்கும் சக்ரமும் அலங்கரிக்கின்றன. சன்னதியின் எதிரே உள்ள துவாரத்தின் வழியாக பார்த்தால் யோக நரசிம்மர் குடி கொண்டுள்ள கோயில் தெரியும். நித்தமும் பகவானை தியானித்து யோக  நிலையில் இருக்கும் யோக ஆஞ்சிநேயரை நாம் கண் குளிர தரிசிப்போம் . ஆஞ்சநேயருக்கு நிறைய இடங்களில் கோயில்கள் உண்டு . ஆனால் இங்கு மட்டுமே அவர் யோக ஆஞ்சநேயராக  காட்சிதருகிறார் .இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அஹிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.

அவரை தரிசித்துவிட்டு நாம் வந்தால் ரங்கநாதர் மற்றும் ஸ்ரீராமரை  தரிசனம் செய்யலாம்.

தலப்புராணம்  :

இந்திரதூமன் என்னும் அரசன் ஒருமுறை கவரிமானை வேட்டையாடி அதனை துரத்திக் கொண்டே சோழசிம்மபுரம் காட்டுக்குள் நுழைந்தார். அவர் துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத்தொடங்கியது. மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண்முன்னே அந்த மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்துவிட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அஹிம்சையை பின்பற்றினார். ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அஹிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மாற்றி இந்த நரசிம்மர் குடியிருக்கும் மலையில் ஏறும் எந்த ஒரு உயிருக்கும் ஶ்ரீஹரியின் வைகுண்டத்தில் இடம் உண்டு முக்தி உண்டு என்று ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் தோன்றி மன்னருக்கு அருளாசி வழங்கினார்.

சோழசிம்மபுரத்தில் கும்போதரன் என்னும் அரக்கனின் அட்டகாசத்தை மன்னர் இந்திரதூமன், போரிடாமல் அஹிம்சை முறையிலேயே அடக்கி, அந்த ஊருக்கு அமைதியைக் கொணர்ந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று அருள் மிகு யோக ஆஞ்சநேய சுவாமி சங்கு சக்கரங்களை பெற்று ஸ்ரீ வைஷ்ணவ தீக்ஷை பெற்று பரிபூர்த்தியை அடைந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஆடிமாத ஏகாதசி அன்று மகான்கள், மடாதிபதிகள், தவஸ்ரேஷ்டர்கள் மூலமாக சங்கு சக்கர தப்த முத்ராதாரணம் செய்து கொண்டால் முக்தி நிச்சயம்.

கார்த்திகை மாதத்தில் ஒவ்வொறு ஆண்டும் வெள்ளி ஞாயிறு தினங்களில் பெரிய மலையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் உற்சவம் நடத்தப்படுகிறது. அதே போல் சிறிய மலையிலும் ஞாயிறு அன்று அருள்மிகு யோக ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் பிரார்த்தனைகள் உற்சவங்கள் விஷேசமாக நடத்தப்படுகிறது.

இவ்வளவு சிறப்பான வேறு எங்கும் காணமுடியாத பழமையான யோக அனுமனை நாம் தரிசித்து நாம் வாழ்வில் எல்லா வெற்றிகளையும் ,வளமான வாழ்வையும் பெறுவோமாக .

Images:

https://alayamtrails.blogspot.com/2025/04/sri-yoga-anjaneyar-temple-sholinghur.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 8 .30 முதல் மாலை 6 .00  மணி வரை

செல்லும் வழி :

வேலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்திலும், ராணிப்பேட்டையில் இருந்து 29 கிலோமீட்டர் தூரத்திலும், திருத்தணியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்திலும் சோளிங்கர் உள்ளது . சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக இக்கோயிலுக்கு செல்லலாம் .

History in English

Sri Yoga Anjaneyar Temple -Sholinghur

Yoga Narasimha will remember us in this world that comes to mind as Sholinghur. Yoga Narasimha is on a large mountain with about 1305 stairs. Yoga Anjaneyar is blessed in the hill of about 406 staircases near the hill.

Devotees worship the camphor on the staircase in front of the entrance and begin to climb the mountain. If we cross the 406 stairs, we can reach the temple of the Lord. With the work of the Rajagopuram, we go into the premises of the temple with another route. Situated in the West, Sri yoga Anjaneyar is looking to the west. Sri Anjaneyar is in a state of view of Sri yoga Narasimha.

Upon entering, we can see the biggest outlet. There is a beautiful pool in the middle of the prakaram. The name of the site is the name of Hanuman Theertham.

Glory of Hanuman Theertham

This Hanuman Tirtha is very sacred. It is in this tirtha that Thirumanjanam is held for Hanuman. If the mentally ill and family problems are bathed in the pool, lying in the stairs, meditating on Hanuman, he comes to their dreams and fulfills their wishes and gets free from mental health and family problems. Pilgrims still come to the family as a family.

We will now go to the Hanuman shrine. Hanuman is a little taller. Sri Anjaneyar is in a state of yoga. The temple of Yoga Narasimha is drinking through the opening of the shrine. We will see the Yoga Anjinayar who meditates on Bhagavan and the Yoga. Anjaneyar has a lot of temples. But here only he is the Yoga Anjaneyar.

we come to see him, we can visit Ranganathar and Sri Rama.

Talapuranam:

The king of Indradhuman once hunted Kavariman and chased it into the Cholasimpuram forest. The deer he chased there began to climb the small mountain. The king also climbed the mountain. But before his eyes, the deer turned into the image and then disappeared. Surprised, the king followed the first non -violence on that day. Sri Yoga Anjaneyar appeared to the king that there is a place in the Vaikundam of Srihari, who is in the Vaikundam of Srihari, who is in the hill where the Narasimha lives in the hill of Sriyoga Narasimha, to turn the king on the path of non -violence.

King Indradhuman, the king of Kumbodharan, in Cholasimpuram, suppressed the non -violent manner of the town and brought peace to the town.

History says that on Sunday, Arul Miku Yoga Anjaneya Swami got the chakra chakras and reached Sri Vaishnava Deeksha. Mukti is sure to make the Sangu Chakra Dapta Mudrakadasam on the day of the Ekadasi, the Mahans, the Madhapadis and the Tawasreshis.

On Fridays of the month of Karthik, a special Thirumanganam decoration and festival is held on the big hill on Fridays. On Sundays on Sunday, a special Thirumanganam decoration and prayers are held on Sunday.

Let us see the oldest yoga sanction that is nowhere else to see and we have all the success and prosperity in life.

Open time:

From 8.30 am to 6.00 pm

The way to go:

Sholinghur is 52 km from Vellore, 29 km from Ranipet and 26 km from Thiruthani. You can travel from Chennai to the temple via Arakkonam.

Leave a Reply