ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில் – நரசிங்கம்பேட்டை
- காவேரி கரையில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும் . நரசிம்மர் என்றாலே உக்கிரமானவர் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருக்கும் அவர் இவ் புண்ணிய தலத்தில் யோக நரசிம்மராக அருள்தருகிறார் .
- இரணியகசிபு வதத்திற்கு பிறகு தன் கோபம் தணிய இறைவன் அமர்ந்த தலங்களில் இவ் தலமும் ஒன்றாகும் . நரசிம்மர் இரணியகசிபு வதத்தினால் ஏற்பட்ட தோஷத்தில் இருந்து விடுபட இக்கோயிலுக்கு அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்புநாதர் சிவனை பூஜித்து தோஷத்தில் இருந்து விடுபட்டார். இவ்வூருக்கு நரசிங்கம்பேட்டை என்ற சிறப்பு பெயர் இதனாலேயே ஏற்பட்டது என்று கூறலாம் .
சுமார் 1000 வருடங்கள் முற்பட்ட கோயிலாகும் . விஜயநகர அரசர்களால் இக்கோயில் புனரமைக்கப்பட்டது.
- விஸ்தாரமான கருவறையில் நரசிம்மர் பெருமாள் நான்கு கரங்களுடன் அருள்புரிகிறார் . சங்கு, சக்கரம் இரு கைகளில் ஏந்திக்கொண்டு மற்ற இருக்கரங்களை யோக முத்திரையில் வைத்து அமர்ந்த கோலத்தில் மிகவும் சாந்த முகத்துடன் நமக்கு சேவை சாதிக்கிறார்
- இக்கோயில் இந்துசமய அறநிலைத்துறை நிர்வகித்து வருகிறது , ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது .
திறந்திருக்கும் நேரம் :
காலை : 11 .00 -12 .00 மணி வரை
அர்ச்சகர் பெயர் : பாலகிருஷ்ணா பட்டாச்சாரியார்
தொடர்பு எண்: 9790859270 ,0435 -2430564
செல்லும் வழி:
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுமார் 18 தொலைவில் நரசிங்கப்பேட்டை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடது புறம் நடந்து சென்றால் இக்கோயிலை அடையலாம்
Location: