ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில் – யானைமலை
இறைவன் : யோக நரசிம்மர்
தாயார் : நரசிங்கவல்லி
தலதீர்த்தம் : சக்ரதீர்த்தம்
ஊர் : யானைமலை , ஒத்தக்கடை
மாவட்டம் : மதுரை , தமிழ்நாடு
ஆடி ஆடி அகம் கரைந்து , பாடி பாடி கண்ணீர் மல்கி , எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று , வாடி வாடி இவ்வாணுதலே – நம்மாழ்வார்
உலகில் அதர்மங்கள் மேலாகும் போதெல்லாம் இறைவன் எதாவது உருவத்தில் அவதாரம் கொண்டு தீமைகளை அழித்து உலகை சமநிலையை அடைய செய்வார் . அவ்வாறு தீமையின் மருவுருவமாக இருந்த இரணியகசிபுவை அழிக்க பகவான் விஷ்ணு எடுத்த அவதாரம் தான் நரசிம்மர் அவதாரம் .
அவ்வாறு மதுரைக்கு அருகில் உள்ள ஒத்தக்கடை ஊரில் உள்ள 2500 வருடங்கள் பழமை வாழ்ந்த யானைமலையில் குடவரை கோயிலாக மிக பெரிய உருவத்தோடு நமக்கு அருளும் யோக நரசிம்மர் கோயிலை பற்றித்தான் நாம் அறிந்துகொள்ளப்போகிறோம் .
கோயிலமைப்பு :
2500 வருடங்கள் பழமை வாய்ந்த , யானை தன் தும்பிக்கையை நீட்டி அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பதுபோல் இந்த மலை குன்று அமைத்துள்ளதால் இதை யானைமலை என்று கூறுகிறார்கள் . சைவ ,வைணவ மற்றும் சமணர்கள் ஆகியவர்களின் வழிபாட்டு தளங்களை தாங்கி இவ் மலை காட்சிதருகிறது .
பெரிய திருசுற்றுடன் கோயில் காணப்படுகிறது , உள்ளே நுழைந்தால் ஒரு நன்கு கால் மண்டபம் காணப்படுகிறது அதன் நேரே மூன்று அடுக்கு ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது , கோயிலுக்கு நுழைந்தால் தாயார் நரசிங்கவல்லி சன்னதியை காணலாம் , தாயார் கருணை பொழியும் முகத்துடன் மேலிரு கரங்களில் தாமரை , முன்னிருக்கரங்கள் அபய- வரத முத்திரையுடன் சுகாசனத்தில் அமர்ந்து நமக்கு அருளை அள்ளித்தருகிறார் . நாம் தாயாரை வணங்கிவிட்டு மூலவர் நரசிம்ஹர் சன்னதியை நோக்கி சென்றால் முதலில் கருட மண்டபத்தை காணலாம் , கருடரை வணங்கிவிட்டு உள்ளே சென்றால் குடவரை கோயிலில் நரசிம்ம தூண்களை கொண்ட மகா மண்டபத்தை காணலாம் , அதன் வழியே நடந்தால் முன் மண்டபம் கடந்து உள்ளே சென்றால் மூலவர் யோக நரசிம்மர் மலையின் பாறையை குடைந்து மிக பெரிய உருவமாக நமக்கு காட்சிதருகிறார் . யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக ஸ்ரீநரசிம்மர். பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ… முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் ஸ்ரீயோக நரசிம்மரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்!
நரசிம்மரை வணங்கிவிட்டு நாம் வெளியே வந்தால் வடதிசையில் விநாயகர் சன்னதி அதனை ஒட்டி கோயிலின் பிரமாண்டமான சக்கர தீர்த்த குளத்தை நாம் காணலாம் .
சிறப்புகள் :
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். ஆனால் தேய்பிறை பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோவிலில் தேய்பிறை பிரதோஷ தினத்தில் மிக சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. அருகில் உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கஜேந்திர மோட்சம் நிகத்திய தலம் .
யானைமலை சிறப்பு :
மதுரையை சுற்றி நிறைய குன்றுகளும் , மலைகளும் இருந்தாலும் இந்திய யானைமலை வரலாற்றோடு தொடர்பு கொண்ட மிக பழமையான மலையாகும் . இவ்மலையானது மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடையில் அமைந்துள்ளது . யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் கண்டு வியக்கலாம். இதன் காரணமாக இம்மலை ‘யானை மலை’ ஆனது.
குடைவரை கோயில் :
கி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார்.
குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய்பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
இக் குடைவரைக் கோவிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோவிலுக்குச் செய்திருக்கின்றனர் என்கூறுகிறது.
லாடன் குடவரை :
நரசிம்மர் கோயிலின் வலதுபுறத்தில் சென்றால் இந்த லாடன் குடவரை கோயில் அதாவது முருகன் குடவரை கோயில் வரும் . இந்த கோயிலானது தமிழ்நாடு தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ளது . எட்டாம் நூற்றாண்டில் முருகனுக்காக அமைக்கப்பட்ட குடவரை கோயிலாகும் . ஒரு சிறிய கருவறையும் , திறந்த செவ்வக வடிவ முன் மண்டபமும் உள்ளன . கருவறையில் முருகன் தெய்வானையுடன் அமைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளார்.
இந்த குகையானது அடிப்படை கட்டடக்கலை அம்சத்தை தாங்கி நிற்கிறது . முன் பகுதி , பின்சுவர் ,படிக்கட்டுகள் ,படிக்கட்டு தண்டவாளங்கள் ஆகியவை உள்ளன . உபானம், ஜகதி ,உருளை குமுதம் , கம்பு ,நாமுக அரைத்தூண் மற்றும் உத்திரம் ஆகிய நிலைகளில் உள்ளது .
மேல்பகுதி வாஜனம் மற்றும் கபோதத்துடன் கூடிய மேற்கூரை உள்ளது . கீழ்ப்பகுதி பாத பந்த அதிஷ்டானம் முடிவற்ற நிலையில் உள்ளது, பட்டிகை ,கண்டபாதம் ,கண்டம் உள்ளது . முடிவற்ற நிலையில் ஜகதி மற்றும் குமுதம் உள்ளது . உள் பகுதியானது முகப்பு மண்டபம் மற்றும் கருவறை உள்ளது .
இக்கோயிலின் கிழக்கு சுவரில் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டஎழுத்து கல்வெட்டு உள்ளது . இவ் கல்வெட்டானது இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டதை தெரிவிக்கிறது.
சமணர் குடவரை :
ஒத்தக்கடையில் இருந்து நரசிம்மர் கோயிலுக்கு வரும் வழியில் வலது புறத்தில் இவ் குடவரை கோயிலின் முகப்பு உள்ளது .
நரசிங்கப் பெருமாள் கோயில் செல்லும் வழியிலுள்ள இந்த குகைத்தளத்தில் உள்ள சமணச்சிற்பங்கள் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்கு வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. குகைமுகப்பில் பல சிற்பங்கள் உள்ளன. தீர்த்தங்கரர் சிற்பங்கள், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகாயட்சி, மாவீரர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள சிற்பங்களில் மிக அழகாக வண்ணம் பூசி சித்திரங்களைத் தீட்டியுள்ளனர். இதே போன்று சித்தன்னவாசலிலும் அழகாக சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இங்குள்ள சிலைகள் சமணர்களின் புராணக்கதைகளை விளக்குகின்றன. பார்சுவநாதரின் சிலையைப் பார்க்கும் போது அவருக்கு மேலே தர்ணேந்திரன் என்பவன் ஐந்துதலைப்பாம்பாக மாறி குடைபிடித்துக்கொண்டிருக்கிறான். தர்ணேந்திரனின் மனைவியாகிய பத்மாவதி என்ற இயக்கி பார்சுவநாதருக்கு அருகில் ஒரு குச்சியைப்பிடித்திருப்பதுபோல் காணப்படுகிறது. கமடன் என்ற அசுரன் ஒருவன் பார்சுவநாதர் மேல் கல்லைத்தூக்கி போட வருவதுபோலவும், அவனிடமிருந்து காப்பது போல தர்ணேந்திரன் சிற்பமும் காணப்படுகிறது. கமடன் பின் பணிந்து பார்சுவநாதரை வணங்குவது போலவும் அதே சிலையின் அடியில் வடித்துள்ளனர்.
பார்சுவநாதருக்கு அருகில் பாகுபலி சிலை காணப்படுகிறது. பாகுபலி ஆதிநாதரின் மகன். ஆதிநாதர் தீர்த்தங்கரர்களுள் ஒருவர். பாகுபலிக்கு இருபுறமும் நிற்பவர்கள் பிராமி மற்றும் சுந்தரி. இருவரும் பாகுபலியின் சகோதரிகள். பிராமியின் பெயரில்தான் கல்வெட்டுக்களுக்கு பிராமி எனப் பெயர் வந்தது.
மகாவீரரின் சிற்பத்தின் மீது வண்ணம் பூசி இருபுறமும் விளக்குகள் மற்றும் சாமரம் வீசுவோரின் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. சித்திரங்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றும் அழியாமல் உள்ளது. அதன் அருகில் அம்பிகா இயக்கியின் சிற்பம் காணப்படுகிறது. அம்பிகா இயக்கியின் கதையும், காரைக்கால் அம்மையாரின் கதையும் ஒன்று போலவே சொல்லப்படுகிறது. இறைபக்தி அதிகம் கொண்ட பெண்கள். கணவன் கொடுத்த இரண்டு மாங்கனிகளுள் ஒன்றை இறையடியாருக்கு கொடுத்துப் பின் கணவன் கேட்டதும் ஒன்றை தன் பக்தியின் வலிமையால் கொடுத்ததை கணவன் உணர்ந்து அவளை வணங்குவது. இந்தக் கதைகள் சைவசமயத்திலும், சமணசமயத்திலும் பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது.
இங்குள்ள சிலைகளை அச்சணந்தி என்ற அடியார் செய்ததாக குறிப்புள்ளது. இங்குள்ள வட்டெழுத்துக்கல்வெட்டுக்களில் ஒன்று இச்சிலைகளை பாதுகாக்கும் பொறுப்பை நரசிங்கத்து சபையாரிடம் விட்டிருந்ததை குறிப்பிடுகிறது. அந்தக் காலத்தில் சபையாராகயிருந்த பிராமணர்களே இதை பாதுகாக்க முன்வந்திருக்கிறார்கள். யானைமலை சமயநல்லிணக்க மலையாக இருந்து வருகிறது.
தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய மதுரைப் பதிகத்தில், யானைமலையில் சமணர்கள் பள்ளிகளை அமைத்துத் தங்கி இருந்த செய்தியைக் கூறியுள்ளார். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. மதுரையைத் தாக்கவந்த ஒரு பெரிய யானையை, மதுரையைக் காக்கும் கடவுளான சொக்கநாதர், நரசிங்கம் என்னும் அம்பினைத் தொடுத்து அந்த யானையை நகர விடாமல் செய்ய, அதுவே யானைமலையாக மாறியது என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் பிற்கால இலக்கியச் செய்திகள் ஆகும். ( நன்றி – கொற்றவை நியூஸ் )
நரசிம்மர் கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 11 .00 மணி வரை , மாலை 5 .00 முதல் இரவு 8 .00 மணி வரை .
வி.கே.ரமேஷ் பட்டர் @ 98464 68780, பி. ராஜகோபால் பட்டர் @ 98654 88821
தொலைபேசி: 0452 2422750 அல்லது 0452 2422158
More Photos:
https://alayamtrails.blogspot.com/2023/12/sri-yoga-narasimhar-temple-yanamalai.html
செல்லும் வழி :
மதுரை மாட்டு தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் 3 km தொலைவில் ஒத்தக்கடை என்ற சந்திப்பு வரும் அங்கிருந்து இடது புறம் திரும்பி சென்றால் யானைமலை அடிவாரம் வரும் அங்கேயே இக்கோயில் அமைந்துள்ளது .
அருகில் உள்ள கோயில் :
1 . காளமேக பெருமாள் கோயில் – திருமோகூர் ( 108 திவ்ய தேசம் )
2 . திருமறைநாதர் கோயில் – திருவாதவூர் (மாணிக்கவாசகர் அவதார தளம் )
English Summary :
Whenever adharmas rise in the world, God incarnates in some form and destroys the evils and brings balance to the world. Narasimha avatar is the avatar taken by Lord Vishnu to destroy Iranyakashipu who was the epitome of evil.
Thus, we are going to learn about the Yoga Narasimha Temple, which graces us with a very large image as Kudavari Temple on the 2500 year old Yanamalai in Othakadai town near Madurai.
Temple Structure:
2500 years old, this mountain is called Yanimalai because it is built like a sitting elephant with its trunk extended. The hill bears the places of worship of Saivas, Vaishnavas and Jains.
The temple is seen with a large circumambulation, a well-built mandapam is seen upon entering, a three-storied Rajagopuram welcomes us, upon entering the temple, we see the shrine of Mother Narasinghavalli, Mother with a face overflowing with mercy, with lotus in her upper arms, and her forehands with Abaya-Varatha mudra, sits on Sukasana and bestows grace upon us. If we worship the Mother and go towards the shrine of Moolavar Narasimha, we will first see Garuda Mandapam, if we go inside after paying homage to Garuda, we will see the Maha Mandapam with Narasimha pillars in Kodavara temple, if we walk through it and pass the front hall and enter, then Moolavar Yoga Narasimha will be visible to us as a very large image carved on the rock of the mountain. Sriyoga Srinarasimha looks majestic in yoga pose. Conch-chakram in the hind two arms… One can keep darshan of Shriyoga Narasimha with the front two arms on his knees!
If we come out after worshiping Lord Narasimha, we can see the Vinayagar shrine in the north direction and the temple’s huge chakra tirtha pond next to it.
Specialties:
Pradosha is a day dedicated to Lord Shiva. But during Teipira Pradosha, Mahavishnu Narasimha took incarnation in this temple and very special poojas are performed on Teipira Pradosha day. The nearby Tirumogur Kalameka Perumal Gajendra Moksam Nigathiya Thalam.
Elephant Hill Specialty:
Although there are many hills and mountains around Madurai, the oldest mountain associated with India’s history is the Elephant Hill. This hill is located at Othtakadi on the Madurai-Trichy National Highway. The length of the Elephant Hill is about 4 km, ie 4000 meters long, 1200 meters wide and 400 meters high. If you look at this mountain from a distance, you will be surprised to see an elephant sitting on a kolam with a hymn stretched out in front of it. Due to this this mountain became ‘Elephant Mountain’.
Kudaivara Temple:
AD 770th century Madurai was ruled by Pandya king Maranchadayan Parantaka Nedunchadayan. Marankari Kalikuta Vaidyan aka Moovenda Mangalap Perathayan served as minister of the Pandya king. He decided to build a temple to Narasingha Perumal to Kudai, northwest of the Elephant Hill, and started the preliminary work.
An inscription found here says that when Kudai Tok temple was nearing completion, he fell ill and died, his younger brother named Maran Einan, also known as Panda Mangala Tiyya Atiyan, took office as a minister and performed the tirupani of this temple and made Kudamukuz.
This Kudaivara temple has Granth, Vattelhu and Tamil inscriptions. In these inscriptions, it is said that the early Pandyas, Cholas, Chola Pandyas, later Pandyas, Vijayanagara kings have done many repairs to this temple in different periods.
Ladon Gudavari:
If you go to the right of the Narasimha temple, you will come to this Ladan Kudavari temple i.e. Murugan Kudavari temple. This temple is under the control of Tamil Nadu Archaeology. Gudavari Temple was built for Murugan in the eighth century. There is a small sanctum sanctorum and an open rectangular front hall. In the sanctum sanctorum, Murugan is cast in a pose with the Goddess.
The cave bears a basic architectural feature. There is front part, back wall, stairs and stair rails. Upanam, Jagati, Urulai Kumutam, Kambu, Namukha Aradithun and Uthiram are in stages.
The upper part has a roof with vajanam and kapotham. The lower part is pada bandha adishtanam which is endless, pattikai, kandapadam, kandam. In infinity there is Jagati and Kumuda. The inner part consists of the front hall and sanctum sanctorum.
On the eastern wall of this temple there is a circular inscription of the 8th century. This inscription indicates that the temple was renovated.
Location: