சூரிய கிரஹண அனுஷ்டானம்
காலையில் எழுந்து ஸ்நானம், சந்தியாவந்தனம் செய்யவேண்டும் .மறுபடியும் கிரஹணம் ஆரம்பிக்கும் போது ஸ்நானம் செய்து விபூதி / கோபி இட்டுக்கொண்டு காயத்ரி ஜபம் மதியகாலம் வரை செய்யவேண்டும் .
மத்தியகால தர்ப்பணம் : கிரஹண மத்தியகாலத்தில் சர்வ பித்ரு தர்ப்பணம் மற்றும் தானம் செய்யவேண்டும் .
இவ் காலத்தில் நாம் செய்யும் தானங்கள் மிகுந்த பலனை அள்ளித்தரும் . தானமாக ஸ்வர்ணம் ,தானியங்கள் ,தேங்காய், பழங்கள் மற்றும் தட்சணைகள் கொடுக்கலாம் ,அதுமட்டும் அல்லாமல் அன்றைய காலத்தில் நாம் செய்யும் ஜபங்களுக்கு அதிக சக்தி உண்டு .ஆதாலால் கிரஹண மோட்ச காலம் வரை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம் .
பிறகு நாம் கிரஹணம் விட்ட பிறகு திரும்பவும் ஸ்நானம் பண்ணவேண்டும் .இது எல்லோருக்கும் அதாவது தாய் தந்தை உள்ளவர்கள் இல்லாதவர்கள் ,கிரஹஸ்தர்கள் ,பிரம்மச்சாரிகள், குழந்தைகள் , த்ரீகள் எல்லோரும் தலைக்கு ஸ்நானம் செய்யவேண்டும்
அதன் பிறகு பூஜை ,நைவேத்தியம் செய்துவிட்டு சாப்பிடவேண்டும் . கிரஹாகாலத்தில் கிரஹசாந்தி செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரக்காரர்கள் கிரஹசாந்தி செய்துகொள்ளவேண்டும் .
கர்ப்ப த்ரீகள் க்ரஹத்தன்று வெளியே செல்லவும் மற்றும் சூரியனை பார்க்கவும் கூடாது .
சூரிய க்ரஹ பரிகார ஸ்லோகம் :
க்ரஹ காலத்தில் இந்த ஸ்லோகத்தை நாம் பாராயணம் செய்தால் அதன் தோஷத்தில் இருந்து விடுபடலாம் .
கீழே கூறப்பட்டுள்ள ஸ்லோகங்கள் #சாந்திகுஸுமாகரம் என்கிற நூலில் க்ரஹண சாந்தியைக் கூறுமிடத்தில் காணப்படுகின்றன.
ஈச்வரனின் அஷ்டமூர்த்திகளாகிய இந்த்ரன், அக்னி, எமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய 8 திக்பாலகர்களும் க்ரஹணத்தினால் ஏற்படக்கூடிய தோஷங்களைப் போக்கட்டும் என்பது இந்த ஸ்லோகங்களின் கருத்து.
ஆகையால் க்ரஹண சமயத்தில் இதை பாராயணம் செய்து தோஷத்திலிருந்து விடுபடுவீர்களாக.
பாராயணம் செய்ய_வேண்டிய ஸ்லோகங்கள்:
யோzஸெள வஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மத: |
ஸஹஸ்ரநயன: ஸூர்ய –
க்ரஹபீடாம் வ்யபோஹது ||
முகம் யஸ்ஸர்வபூதாநாம்
ஸப்தார்சி ரமிதத்யுதி: |
ஸூர்யோபராகஸம்பூதா –
பீடாமக்னிர் வ்யபோஹது ||
ய : கர்மஸாக்ஷி பூதானாம்
யமோ மஹிஷவாஹந: |
யமஸ்ஸூர்யோ பராகோத்தாம்-
தத்ர பீடாம் வ்யபோஹது ||
ரக்ஷோகணாதிபஸ் ஸாக்ஷாத்
ப்ரளயாநிலஸந்நிப: |
கட்கவ்யக்ரோzதிபீதிச்ச –
ரக்ஷ்: பீடாம் வ்யபோஹது ||
நாகபாசதரோ தேவ:
நித்யம் மகரவாஹந: |
ஸஜாலாதிபதிஸ் : ஸூர்ய –
க்ரஹபீடாம் வ்யபோஹது ||
ப்ராணரூபீ த்ரிலோகாநாம்
வாத : க்ருஷ்ணம்ருகாதிப : |
வாயூஸ்ஸூர்யோபராகோத்தாம்
தத்ரபீடாம் வ்யபோஹது ||
யோzஸெள நிதிபதிர் தேவ:
கட்கசூலகதாதர : |
ஸூர்யோபராககலுஷம் –
தனதஸ்தத் வ்யபோஹது ||
யோzஸெள பிந்துதரோ தேவ :
பீனாகி வ்ருஷ வாஹந: |
ஸூர்யோபராகபாபானி –
விநாசயது சங்கர: |
எளிய மந்திரங்கள் :
ஓம் சிவாய நமஹ
ஓம் கணபதியே நமஹா
ஓம் சரவண பவ
என நமக்கு தெரிந்த மந்திரங்கள் தெரியுமோ, உங்களுக்கு எந்த சுவாமி பிடிக்குமோ அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம். அதை தொடர்ந்து சொல்லி வருவது நல்லது. இவற்றை ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிடைக்கும். அதோடு இதனால் உங்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்கள் நீங்கும்.
செய்யக் கூடாதவை:
கிரகண நேரங்களில் உணவு அருந்தக் கூடாது. நீர், காபி, டீ எடுத்துக் கொள்ளுதல் கூடாது. ஏன் என்றால் சர்ப்ப கிரகங்களான ராகு – கேதுவின் விஷங்கள் ஒளிக்கதிர் மூலமாக வருவதாக ஐதீகம்.
அறிவியல் ரீதியாக ஒளிக்கற்றையில் கதிர் வீச்சுக்கள் இருக்கும் என்பதால் அது நல்ல பொருட்கள் மீது பட அசுத்தம் ஏற்பட்டுவிடும் என்பார்கள் அதனால் தான் கோயில்களை கூட அந்த நேரத்தில் பூட்டி விடுவார்கள். கிரகணம் முடிந்த பின்னர் சுத்தம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.
கிரகணங்கள் மூலமாக சில நட்சத்திரங்களுக்குத் தோஷம் உண்டாகலாம்.
தோஷ நிவர்த்தி பொருள்:
தர்ப்பை புல்லுக்கு எதையும் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. அதனால் கிரகண நேரத்தில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உணவு பொருட்களின் மீது தர்ப்பை போட்டு வைப்பது நல்லது.
தர்ப்பை இருக்கும் காட்டிற்கு பாம்பு செல்லாது. தர்ப்பைக்கு விஷயத்தை முறியடிக்கக் கூடிய தன்மை உண்டு. இதனால் தண்ணீர் தொட்டிக்குள் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும்.
கிரகண நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அப்படி செய்தால் தூங்குவது தான் வாழ்க்கையில் அதிகம் நீடிக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பெரியவர்களாலும், சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளதை வைத்து தொகுத்துள்ளேன் .