ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில் -பவானி இறைவன் : சங்கமேஸ்வரர் இறைவி : வேதநாயகி தல விருச்சகம் : இலந்தை தல தீர்த்தம் : காவேரி ,பவானி ,அமிர்த நதி புராணப்பெயர் : திருநணா ஊர் : பவானி மாவட்டம் : ஈரோடு, தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 207 தலமாகும் ,கொங்கு மண்டல தேவார பாடல் பெற்ற தலங்களில் 3 வது தலமாகும் .திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம் . ஐந்து மலைகள் சூழ்ந்த மையத்தில் அமைந்துள்ளது .வடக்கில் வேதகிரியும் ,வடகிழக்கில் சங்ககிரியும் ,கிழக்கில் நாககிரியும் ,தெற்கில் மங்களகிரியும் ,காவேரியில் பத்மகிரியும் அமைந்துள்ளது . காவேரி ,பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமிர்தநதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடம் என்பதால் “கூடுதுறை ” என்றும் அழைக்கப்படுகிறது . அம்மன் ,நதி ,தலம் மூன்றிற்கும் “பவானி” என்றே அழைக்கப்படுகிறது . இவ் தலத்தை தென் திரிவேணி சங்கமம் என்றும் அழைப்பார்கள். இத்தலத்தில் வந்து நீராடி இறைவனை தரிசிப்பவர்களுக்கு “யாதொரு தீங்கும் நண்ணாது ” என்ற சொல்லுக்கு ஏற்ப இவூருக்கு ‘திருநணா ‘ என்ற புராண பெயர் ஏற்பட்டது . மூன்று நதிகள் கூடும் இடத்தில் 5 நிலைகளில் 7 கலசங்களுடன் ராஜகோபுரம் அமைந்துள்ளது . கோபுரமே சிவலிங்கமாக கருதுவதால் நந்தி பெருமான் கோபுரத்தை பார்த்தபடி கோபுரத்திற்கு வெளியே வீற்றியிருப்பது தனி சிறப்பாகும் . அம்பிகை வேதநாயகி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .வலதுபக்கம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது,அவரை கடந்து சென்றால் மூலவர் சிங்கமேஸ்வரர் சுயம்புவாக வீற்றியுள்ளார். இக்கோயிலின் …
Read More Sri Sangameswarar Temple- Bhavani