ஸ்ரீ நீராகத்தான் கோயில் -காஞ்சிபுரம் (திருநீரகம்)
மூலவர் : நீராகத்தான்
தாயார் : நிலமங்கைவல்லி
கோலம் : நின்ற கோலம்
விமானம் : ஜெகதீஸ்வர விமானம்
தீர்த்தம் : அக்ரூர தீர்த்தம்
மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு
- 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 48 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .
- உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய தேசமாகும் .
- கோயிலின் உள்ளே வலது புறத்தில் தெற்கு நோக்கி அருள் தருகிறார் .
- இக்கோயின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை , பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தன் 108 திருப்பதி அந்தாதியில் அக்காலத்தில் அக்ரூர தீர்த்தம் இருந்ததாகவும் , மார்கண்டயர் முனிவருக்காக பெருமாள் பிரளய வெள்ளத்தில் ஒரு பாலகனாக கண்ணன் வளர்ந்த கட்சியை காட்டி அருளியது போல் தெரிகிறது.
- காஞ்சியின் மீது பகைவர்கள் படையெடுத்தபோது இக்கோயில் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது .அழிவுற்ற கோயிலின் இறைவனை திருமேனியை மட்டும் இக்கோயிலில் சன்னதி அமைத்து வழிபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது .
செல்லும் வழி:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உலகளந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது .