உக்க பெரும்பாக்கம் சிவன் கோயில்
முற்காலத்தில் நம் மன்னர்கள் கிராமம் தோறும் பல கோயில்களை கட்டி அக் கோயில்களின் மூலம் மக்களை சந்திப்பது , பேரிடர் காலங்களில் அக்கோயில்களில் மக்களை தங்க வைப்பது ,தானியங்களை சேமித்து வைப்பது , அன்னதானம் செய்வது ,கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்விப்பது என எல்லா விதமான நடைமுறைகளும் கோயில்களை அடிப்படையாக கொண்டே நிகழ்ந்தன . அரசர்களின் பெருமைகள் ,அவர்களின் தான தர்மங்கள் ,கோயில்களுக்கு அவர்கள் கொடுத்த கொடைகள் , அவர்களுடைய வீர தீர செயல்கள் ஆகியவைகள் அக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிவித்துளார்கள். ஒவ்வொரு கோயில்கள் கட்டும்போதும் அதில் அவர்கள் வெளிப்படுத்தும் சிலைகள் அழகு அம்சம் ஆகியவைகள் காலத்தை கடந்து இன்னும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அக்கோயில்களில் மூன்று வேலைகளும் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் ,அலங்காரங்கள் செய்தனர் . ஆனால் பல இடங்களில் இப்போது 1000 வருடங்கள் கடந்த பழமையான பல கோயில்கள் பல கிராமங்களில் கேட்பாரற்று ,புதர்கள் மண்டி அழிவின் விளிம்பில் இருக்கிறது .அதை புணரமைத்து கட்ட பலரும் முன் வருவதில்லை .ஆனால் அதே ஊரில் புதியதாக அம்மன் கோயிலையோ அல்லது பிள்ளையார் கோயிலையோ காட்டுகிறார்கள் . பல வருடங்கள் கடந்த வரலாற்றை சுமந்திருக்கும் பழைய கோயிலை புதுப்பிக்க மனம் வருவதில்லை . அதை நினைக்கையில் மனம் வருத்தம் அடையவே செய்கிறது .
இப்படிப்பட்ட மிகவும் பழமையான பல்லவர் காலத்தை சேர்ந்த ஒரு கோயிலை பற்றித்தான் நாம் இந்த பகுதியில் காணப்போகிறோம் .
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் சுமார் 16 km சென்றால் இந்த உக்க பெரும்பாக்கம் வரும் . இடது புறம் வரும் சிறிய சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம் . இவ்வூருக்கான மேப்பை கிழே கொடுத்துள்ளேன் .
இக்கோயிலை நாங்கள் அடைந்தபோது எங்களுக்குள் ஒரு வருத்தத்தையே தந்தது . முற்றிலும் நிலைகுலைந்து போன செங்கற் கற்றிலியில் மரத்தின் உதவியால் இருக்கும் கோயிலுக்குள் ஈசன் உள்ளார்.கோயிலானது முற்றிலும் சிதைந்து போய் உள்ளது . வேலுதரன் அய்யா இக்கோயிலை பார்த்து இது பல்லவர்கள் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறினார் . இடிந்த கோயிலுக்குள் ஈசன் மிக கம்பிரமாக சற்று பெரிய லிங்க திருமேனியுடன் காட்சி தருகிறார் . இவருக்கு இன்னும் எந்த பெயரும் வைக்கவில்லை.
இவ் இடத்தில இருந்து வெளிவந்த விநாயகர் மற்றும் இன்னுமொரு லிங்கம் ஆகியவர்கள் இக்கோயிலில் வெளியே வைத்து வணங்கிறார்கள். இடுப்புக்கு மேல் பகுதி வரை சிதலமடைந்த அய்யனார் சிலை உள்ளது .
பின் புறத்தில் உள்ள வேப்ப மரத்திற்கு கிழ் ஒரே கல்லில் சப்த மாதர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் ,அங்கு இருந்த அனுஷியா என்ற பெண்மணி இந்த சிலை பூமிக்கு கிழ் இருந்து கொஞ்சம் கொஞ்சம்மாக வெளி வந்ததாக கூறினார் அது போல் இவ் சிலையின் அருகிலேயே ஒரு சிலை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டு இருக்கிறது அதை பற்றி அவரிடம் கேட்டபோது வீரபத்திரர் என்று கூறினார் . அவர் இங்கே குறி சொல்வதாக சொன்னார் .
மிகவும் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த கோயிலை அரசாங்கமோ அல்லது இந்த ஊர் பெரியவர்கள் முயற்சி செய்தால் விரைவில் புது பொலிவு பெரும் நம்பிக்கை உள்ளது . பக்தர்கள் முடிந்த அளவிற்கு இது போன்ற கோயில்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் .
More Photos:
https://alayamtrails.blogspot.com/2021/08/ukka-perumbakkam-sivan-temple.html
Location:
ஓம் நமச்சிவாய