Yama Deepam

எம தீபம்

தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு யம தீப திரயோதசி என்று பெயர். அன்று மாலை யமதர்மராஜாவைக் குறித்து வீட்டுக்கு வெளியே மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்குகளை ஏற்ற இது அபம்ருத்யு ( ஆக்ஸிடெண்ட், நோய் ) தோஷத்தைப் போக்கும். நீண்ட ஆயுள் தரும் என்கிறது ஸ்காந்த புராணம்.

ஸங்கல்பம் : மம ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீபதானம் கரிஷ்யே. என சொல்லி வீட்டில் எத்தனை பேர் உள்ளனரோ தலா ஒவ்வொரு விளக்கு வீதம் அவர்களை கொண்டே ஏற்றி வைக்கச் சொல்ல வேண்டும். பின் பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டிய ஶ்லோகம்.
யம தீபம் எப்போது எவ்வாறு ஏற்ற வேண்டும் தெரியுமா…!

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது வழக்கத்தில் உள்ளது. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

தீபம் ஏற்றும் முறை:

உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

யம தீபம் என்பது என்ன? எப்பொழுது, எதற்காக இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும்?

தீபாவளிக்கு முதல் நாள் இரவு யமதீபம் ஏற்ற வேண்டும். பெரிய அகல்விளக்கு ஒன்றில், முழுதுமாக எண்ணை ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

உங்கள் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில், மிக உயரமாக எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யமதீபத்தை தென் திசை நோக்கி வைக்க வேண்டும். இதனால் யமபயம்/மரண பயம் நீங்கும்.

கதை:

சூரியனின் பிள்ளை யமன, பெண் யமுனா. இருவரும் பாசப்பிணைப்புடன் உள்ளவர்கள். ஒருசமயம் யமுனா தன் சகோதரன் யமனை தன் வீட்டுக்கு அழைத்து விருந்து படைத்தாள்.

தன் சகோதரியைக் காண வந்த யமன் ஏகப்பட்ட துணிமணிகள், நகைகள், பட்சணங்களை சீர்வரிசையாகக் கொண்டு வந்து கொடுத்தான்.

யமுனா தன் அண்ணனுக்கு தன் கையாலே பலவித பட்சணம் தயாரித்து சாப்பிட வைத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த யமன் தங்கையை “தீர்க்க சுமங்கலி பவ’ என வாழ்த்தினான்.

இதனால் தன் சகோதரனால் தன் கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள். இப்படி பாசமுடன் பழகும் உடன்பிறப்புகளுக்கு யமபயம் இருக்காது.

இப்படியாக வரலாறு கூறுகிறது.

அது முதல் சகோதரிகளுக்கு தீபாவளி பணம் கொடுக்கும் பழக்கம் உருவானது. யமத்வீதியா நன்னாளில் சகோதரனை சந்தோஷப்படுத்தும் சகோதரிகளுக்கு விதவைக் கோலம் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Leave a Reply